உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

யும் "அடுக்கியல்" அமைப்புடையது; உறவு அடைகளை முன்னடையாக்காமல் பின்னடையாக்குகிறது; ஐயம், வினா, அழுத்தம் முதலியவற்றைக் குறிக்க (திராவிட மொழிகளுக்கே சிறப்பான முறையில்) அடைகளைப் பெயர் வினைகளுடன் சேர்க்கிறது; வினைக்கு எதிர்மறை உருவும் உண்டு. ஹங்கேரிய மொழியைப்போன்று தன்வினை பிறவினை உண்டு. திராவிட மொழிகளுடன் மிக நெருங்கிய ஒற்றுமை இருப்பதைக் குறிப்பது முன்னிலை ஒருமையாகிய 'நி' என்பதாகும். இதுவும் திராவிடம் பிராகுவி,சீனம், பெஹிஸ்தன் அட்டவணை மொழி, ஆஸ்திரேலியம் முதலிய மொழிகள் அனைத்திற்கும் பொதுவானதென்பது மேலே காட்டப்பட்டது. கனுாரி மொழி மேல ஆப்பிரிக்காவின் மொழிகளிலிருந்து மிகுதியும் வேற்றுமைப்படுவதால் அது தனிப்பட்ட ஆராய்ச்சிக்குரியதாகும்".


1. Subjective verb, 2. Objective verb, 3. See Koelle's Grammar of Bornu.