பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராபர்ட் கால்டுவெல்

11

கிடைத்து, இவரது தமிழார்வத்தை மேலும் மேலும் ஊக்குவதாயிற்று. 1841-ஆம் ஆண்டில் இவர் சமயத்துறையிற்றேர்ந்து குருப் பட்டம் பெற்று, ஆங்கிலச் சர்ச்சிலும் உறுப்பினரானார்.

இவ்வாறு மூன்றாண்டுகள் சென்னையிற் கழிந்ததும், கலைவல்லுநாரய நம் ஐயர் பழங்தமிழ்ப் பதியாய பாண்டிநாட்டிற் பணி செய்யப் புறப்பட்டார்; புறப்பட்டவர் நானூறு கல் தொலைவையும் நடந்தே கழிப்பதெனத் துணிந்தார். அதனால், இடைப்பட்ட நாட்டுமக்களின் பழக்கவழக்கங்களையும், ஆங்காங்கு வழங்கும் மொழியையும் நேரே அறிந்து பயனுறலாகும் என்று இவர் கருதினார். [1] “செல்லும் நெறியில் அமைக்க இயற்கை வளங்களைக் கண்டு இன்புற்றார்; மரங்கள் செறிந்த பூம்பொழில்களில் தங்கி இளைப்பாறினர். காலையும், மாலையும் வழி நடந்து, பொன்னிநாடென்று ஆன்றோராற் புகழ்பெற்ற சோழநாட்டின் அணியாய காவிரிச் செழும்புனலைக் கண்டு களித்தார். அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலத்தின் பழமையையும் பெருமையையும் கண் கூடாகக் கண்டார். மாயூரம் என்னும் மயிலாடுதுறையின் வழியாகச் சென்று கடற்கரையில் அமைந்த தரங்கம்பாடியில் தங்கினார். ‘கத்தும் தரங்கம் எடுத்தெறியும்’ கடலருகே கவினுற விளங்கிய துறையைத் தரங்கம்பாடி என்னும் அழகிய பெயரால் அமைத்த தமிழ்மக்களது அறிவின் பெருமையை வியந்து புகழ்ந்தார்...அப் பாடியிலமைந்து பெருந்தொண்டு புரிந்த [2]தேனிய சங்கத்தின் வரலாற்றையும், அச்சங்கத்தார் இயற்றிய தமிழ்நூல்களின் பெருமையையும் அறிந்து அகமகிழ்ந்தார். அப்பால் கும்பகோணத்தின் வழியா-


  1. கால்டுவெல் ஐயர் சரிதம் — திரு. ரா. பி. சேதுப்பிள்ளையவர்கள் பி. ஏ. பி. எல்.
  2. The Danish Mission.