பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 திராவிட மூலமொழியின்......... மொழி எது ?

125

முமாக இரண்டுபட்ட மொழிகளாகவே நிலவுகின்றன. இலக் கியத்தில் வழங்கும் கன்னடத்தைப் பழங் கன்னடம் என்று அழைக்கின்றனர். ஆனால் உண்மையில், அது பழையதும் அன்று, புதியதும் அன்று; ஏனெனில் கேசவர் இலக்கணம் 1 வகுத்த நாள் முதல், அஃதாவது, 12-வது நூற்றாண்டு முதல், இன்றுவரை, கன்னட இலக்கிய எழுத்தாளர் அனைவரும் அதிலேயே எழுதுகின்றனர். இப்பழங் கன்னடத்தைவிடப் பழைமை என்ற பெயருக்கு உரிமை மிகுதியுடையது பழமலையாளம்; ஏனெனில் இதில் இன்று வழக்காறற்றுப் போன வடிவங்கள் மிகுதி. மேலும் இன்றைய மலையாள இலக்கியம் முற்றிலும் வடமொழிமயமாயிருப்பவும், பழ மலையாள இலக்கியம் பழந்தமிழ் இலக்கியச் சார்புடையதாக இருக்கிறது. தெலுங்கில் செய்யுள் மொழி பேச்சு மொழியிலிருந்து எவ்வளவோ வேறுபட்டுள்ளது. ஆனால், இதற்குத் தனியாகப் பெயரில்லை. தெலுங்குப் புலவர்கள் இதனைத் தூய்மை மிக்க உயர்ந்த தெலுங்கு எனவே கொள்கின்றனர். இலக்கிய நடைமொழிகளுக்கிட்ட பெயர்களுள் தமிழ் இலக்கிய நடை மொழிகளுக்கு இட்ட பெயர்தான் மிகவும் பொருத்தமானதாம். அது செந்தமிழ் என்பது ; அஃதாவது நேரான, திருத்தமான தமிழ் என்பது. இதனின்றும் பிரித்து வேறாகக் கூறப்படும் கொடுந்தமிழ் என்பது பேச்சுத் தமிழையும், தமிழின் இடவகைத் திரிபுகளாக இலக்கண அறிஞரால் வகுத்துரைக்கப்பட்ட பன்னிரு மொழிகளையும் குறிக்கும். ஐரோப்பிய அறிஞர் இச் செந்தமிழைக் குறிக்க "உயர் தமிழ்” என்ற தொடரை வழங்குகின்றனர். கன்னட இலக்கிய மொழிக்குக் கொடுத்த பெயரை விட இது மிகவும் சரியான பெயர் என்பதில் ஐயமில்லை; ஏனெனில், இந்த இலக்கிய மொழிகள் அனைத்துமே ஒரு


1. Kesava's Grammar. ,