பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 திராவிட மூலமொழியின்......... மொழி எது ?

127

முடியாது. ஆனால், இலக்கியத்திலோ இலக்கணத்திலோ ஒரு சொல் வழங்கினால் அஃது அந்நூல் எழுதப்பட்ட காலத்திலேயோ, அன்றி அதற்கு நெடுநாள் முன்னரேயோ அவ்வடிவில் வழங்கி வந்திருக்க வேண்டும் என்று முடிவு செய்யலாகும். ஒரு சொல் இலக்கியத்தில் வழங்குவதற்கு முன்னமேயே அது நெடுநாள் பேச்சு வழக்கில் வழங்கியிருக்க வேண்டுமாதலால், இலக்கிய வழக்கால் அதன் பழைமை இன்னும் நன்றாக வலியுறுமென்பதில் ஐயமில்லை. திராவிட மொழிகள் எதனிலும் ஒரு நால் இலக்கிய வழக்கு உடையது என்று எற்பட்டால் அது குறைந்தது 1000 ஆண்டுகளுக்கு முன்னமேயே வழங்கப்பட்டதொன்று என்று தயங் காமற் கூறி விடலாம். புலவர்களெல்லாரும், பண்டைக் காலப் புலவர்கள் கூட, வழக்காற்றில் மிக அருகி வழங்குவனவாயுள்ள சொற்களையே செய்யுளுக்குச் சிறந்தனவாகக் கருதிப் பொறுக்கிச் சேர்க்கும் வழக்கத்தைக் கையாண்டு வங்துள்ளனர் என்பதும் இங்குக் குறிப்பிடற்பாற்று.

(2) தமிழ் இலக்கியத்தின் பழைமை

ஒப்பியல் இலக்கண முறைக்குப் பயன்படுவ தொருபுற மிருக்க,பொதுவாகவே, செந்தமிழிலக்கியங்களின் பண்டைத் தொன்மை தனிப்பட்ட சிறப்புடையது. அதற்குரிய சான்றுகளிற் சில கீழே தரப்படுகின்றன :-

1. செந்தமிழ் என்பது செம்மைப்பட்ட அல்லது திருத்தமுற்ற தமிழ் மட்டுமன்று; தமிழின் மிகப் பழைமையான முதல் வடிவங்களைப் பெரும்பாலும் அழியாமற் பாதுகாத்து வந்திருப்பதும் அதுவே. இதன் பயனாக, பிற திராவிட மொழிகளில் இலக்கிய நடை பேச்சு நடையினின்றும் வேறுபடுவதை விட, இச்செந்தமிழ் பேச்சுத் தமிழினின்றும் மிகுதியும் வேறுபட்டுக் காணப்படுகிறது. இவ்