பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

வேறுபாட்டின் அளவை நோக்க இதனைப் பேச்சுத் தமிழின் வேறானதொரு தனி மொழி என்று கூடக் கூறி விடலாம். உண்மையில், செந்தமிழின் செய்யுள் நடை மட்டுமேயன்றி, உரைநடை கூடத் தற்காலத் தமிழனுக்கு விளங்காத அளவு கடுமையானதெனல் மிகையாகாது. இக்கால இத்தாலியனுக்கு இலத்தீன் மொழியிலுள்ள விர்கிலின் ஈனிட்1 எவ்வளவு தொலைவோ,அவ்வளவு இன்றைத் தமிழனுக்குச் செந்தமிழும் தொலைவுடையது என்று கூறலாம். மணிக்கணக்காகச் செந் தமிழில் எழுதப்பட்ட கட்டுரை ஒன்றைப் படிக்கக் கேட்ட பின்னரும் கல்வியறிவற்ற தமிழனொருவன் தான் கேட்ட பொருளை ஒரு சிறிதும் அறியான். ஆனால் இவ்வளவுக்கும் திராவிடப் பேச்சு மொழிகளிற் காணப்படும் வட மொழிச் சொற்களை விட, செந்தமிழில் குறைந்த அளவிற்கே அச்சொற்கள் காணப்படுகின்றன. உண்மையில், செந்தமிழின் புதுமை என்னவெனில், அது பேச்சுத் தமிழைவிட வடமொழிச் சொற்கள் குறைந்ததும், தாய்மை மிகுந்ததும் ஆகும் என்பதே. தாய்மையும், நாட்டுப் பற்றும் அதன் உயிர் நிலைகள் ஆகும். அதன் திருத்தம் அனைத்தும் தற்சார்பில் உண்ணின்றெழுந்த திருத்தமேயாம்; வெளிவரவால் ஏற்பட்ட திருத்தமன்று. செந்தமிழ்ச் சொற்களும் இலக்கண அமைதியும் சில பல புலவர்களால் ஒரே காலத்தில் தோற்றுவிக்கப் பட்டிருத்தல் வேண்டும் என்பது ஒப்புக்கொள்ளத் தக்கதன்று ; படிப்படியாகவும் மெதுவாகவுமே பழக்கத்தில் வந் கிருக்க வேண்டும். கீழை நாட்டில் எல்லாம் மெதுவாகவே வளர்ச்சியுற்று வருகிற பான்மைக் கேற்பவே தமிழும் மெது வாகவே வளர்ச்சியுற்றிருத்தல் வேண்டும். அப்படியிருக்க,பேச்சு வழக்கினின்று செந்தமிழ் இன்று காணப்படும்


1. Virgil's ÆNEID.