உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 திராவிட மூலமொழியின்......... மொழி எது ?

129

அளவுக்கு மாறுபாடடைந்துள்ள தொன்றே அதன் பழைமையை நன்கு விளக்கும் சான்றாகும்.

2. செந்தமிழில் சொற்களும், அவற்றின் இலக்கணத் திரிபுகளும் எண்ணிறந்தவையாய் மலிந்து கிடக்கின்றமையும் அகன் பழைமைக்கு இன்னொரு சான்று ஆகும். செந்தமிழின் இலக்கணம் இறந்துபட்ட சொல்வடிவுகள், பழங்கால விகுகிகள், அருவழக்குகள் முதலியவை நிறைந்ததொரு பழம் பொருட்காட்சிசாலை போன்றதேயாகும். சிறப்பாகக் கூறுமிடத்துப் பழந்தமிழில், எளிமை வாய்ந்த பழைய இலக்கண முடிபுகளும், திரிபற்றவையோ அன்றி ஒரு சிறிது திரிபுற்றனவோ ஆன வினைகளும் காணப்படுகின்றன. இப் பழைமைக் குறிகள், செந்தமிழ் மொழியின் முதிரா இளமையிலேயே, எழுத்து வடிவம் ஏற்பட்ட காரணத்தால் செந்தமிழ் வினைச்சொற்களின் வளர்ச்சி தடைப்பட்டதென்பதைக் குறிப்பனவாகக் கொள்ளல் வேண்டும். சீனமொழியிலும் இவ்வாறே வினைச் சொற்கள் இதே காரணத்தால் வளர்ச்சியுறாமல் தடைப்பட்டமை வியக்கத்தக்கக்கதொன்றாம். செந்தமிழின் சொல் வளத்திற்குச் சான்று வேண்டின், யாழ்ப்பாணத்திலிருந்த அமெரிக்கப் பாதிரிமார்கள் வெளியிட்டுள்ள பள்ளிக்கூட அகரவரிசையை 1 எடுத்துக் கொள்ளலாம். அதில் 58,500 சொற்கள் வரை உள்ளன. இவற்றுடன் ஆயிரக்கணக்கான மரபுச் சொற்களையும், தொடர்களையும் சேர்த்தால்தான், தமிழ்மொழிச் சொற்றொகுதி நிறைவுறும். தமிழிற் பயிற்சியுடைய எவரேனும் பிற திராவிட மொழிகளின் அகரவரிசைகளை மேற்போக்காகப் பார்த்தால்கூட அவற்றுள் வியக்கத்தக்க ஒரு வேற்றுமையைக் காண்பர் ; அஃதாவது: தமிழைப்போல அவற்றுள் ஒருபொருட் பலசொற்கள் இல்லை என்பதே. மேலும், ஒவ்

1. Dictionary.

9