130
கால்டுவெல் ஒப்பிலக்கணம்
வொரு கருத்தையும் குறிக்கத் தமிழில் பெரும்பாலும் பிற மொழிகளிற் காணப்படாத சிறப்புச் சொற்கள் இருப்பதோடு அப் பிறமொழிகள் ஒவ்வொன்றுக்கும் சிறப்பான அதே கருத்துடைய சொற்களையும் தமிழ் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது. (எ-டு.) வீடு என்பது தமிழுக்கே சிறப்பான சொல் ஆகும். இதே கருத்தில் தமிழ் இல் (தெலுங்கு இல்லு), மனை (கன்னடம் மன), குடி (வட மொழி குடீ ; பின்னிஷ் மொழிகள் குடி) என்ற சொற்களும் தமிழில் உள்ளன. இங்ஙனம் ஒவ்வொரு திராவிட மொழியிலும் உள்ள சொற்களின் பழந் திராவிட வடிவங்களும், வேர்ச் சொற்களும் தமிழில் இருப்பதால் இதனை அத்தகைய பழந் திராவிட வேர்ச் சொற்களுக்கும் வடிவங்களுக்கும் ஒரு களஞ்சியம் என்னலாம். இச் செய்திகளை நோக்க, தமிழ் மொழி இலக்கிய மொழியாகக் திருத்தமுற்றது மற்றைத் திராவிட மொழிகள் இலக்கிய மொழிகளானதற்கு நெடுங் காலம் முன்னராகும் என்றும், தமிழைத் தவிர்ந்த ஏனைய திராவிடமொழிகள் பண்டைத் தமிழர் மொழியினின்று அக்காலத்தில் பிரிந்திருக்கக்கூட முடியாதென்றும் முடிவு கட்டலாகும். -
3. தமிழின் பழைமைக்கும் தூய்மைக்கும் இன்னொரு சான்று அஃது ஒருபுறம் பழங் கன்னடம், பழ மலையாளம், துளுவம் முதலியவற்றுடனும், இன்னொருபுறம் . துதம், கோண்டு, கு முதலியவற்றுடனும் ஒற்றுமை உடையதாயிருப்பதாகும். பல இடங்களில் இக்காலக் கன்னடமும், தெலுங்கும் தமிழுக்கு மாறுபட்டிருக்கும் போதுகூட, பழங் கன்னடம் முதலிய பழைய மொழிகள் தமிழை ஒத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
4. தெலுங்கு மொழியின் முதற்சொற்களும், விகுதிகளும் தமிழின் முதற்சொல், விகுதி இவற்றின் மரூஉவாக