பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 திராவிட மூலமொழியின்......... மொழி எது ?

135

இருப்பினும் முன்னாட்களில் திங்களியல் சார்பாகவேயிருந்தது. எனவே, அவற்றின் பெயர்கள் திங்கள் தங்கும் விண்மீன்களின் பெயரையே பெரும்பாலும் கொண்டன. இவ் விடங்களிலும், நேரிடையான விண்மீன்களின் பெயர்களிற்கூட சிதைவு மிகுதி காணப்படுகின்றது. (எ-டு):விண்மீனின் பெயராகிய வடமொழி பூர்வ-ஆஷாட(ம்) தமிழில் பூராடம் ஆயிற்று; திங்களின் பெயரிலோ ஆஷாடம் என்ற வடசொல் ஆடம் என்றாகி, அதன்பின் ஆடி என்ற உருப்பெற்றது. வட மொழி விண்மீனின் பெயராகிய அஸ்வினி என்பதே தமிழ்த் திங்கட்பெயர் ஐப்பசி ஆயிற்று. இன்னும் தொலைப்பட்ட சிதைவு புரட்டாசி என்பது. இதன் வடமொழி முதற்சொல் பூர்வ-பாத்ர-பத என்பதாம். இவ் வடசொல்லே விண்மீனின் பெயராக வரும்பொழுது பூாட்டாதி என்றாகின்றது; பின்னர் புரட்டாசி என்று திங்கட் பெயராகத் திரிகின்றது. இவ் விண்மீன்பெயர்கள், திங்கட் பெயர்கள் அனைத்திற்கும் தெலுங்கு கன்னடம் முதலிய மொழிகளில் தனி வட மொழிச் சொற்கள் வடமொழி உருவிலேயே வருகின்றன. இதிலிருந்து இப்பெயர்கள் வடமொழியினின்று அம்மொழிகளில் எடுக்கப்பட்ட காலத்திற்கு நெடுங்காலத்திற்கு முன்னரே தமிழிலக்கியத்திலோ தமிழ் மொழியிலோ எடுத்தாளப்பட்டிருக்க வேண்டுமென்பது தெளிவாகும்.

6. தமிழ்மொழி திருந்திய உருவடைந்த காலத்தின் பழைமையைத் தமிழ்க் கல்வெட்டுக்களிலிருந்தும் அறியலாகும். கர்நாடகத்திலும் தெலிங்காணத்திலும் முற்காலக் கல்வெட்டுக்கள் யாவும், பிற்காலக் கல்வெட்டுக்களிற் பெரும்பாலனவும் வடமொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் இக் கல்வெட்டுக்கள் பழங்கன்னடம் அல்லது பழந் தெலுங்கு எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன. எனினும், இக் கல்வெட்டுக்களின் மொழியோ பெரும்பாலும்