பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 திராவிட மூலமொழியின்......... மொழி எது ?

137

தினுடனும் ஒருவாறு ஒற்றுமை உடையதாய் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கூறிய இப்பழந்தமிழ்க் கல்வெட்டுக்களின் மொழியை எடுத்துக்கொண்டால் அது தமிழே என்பதும், அதுவும் பழைமையும் தாய்மையும் மிக்க செங்தமிழே என்பதும் காண்க : இவற்றின் நடை இலக்கியச் செங்தமிழாயிருப்பதுடன், இக்காலத் தமிழ் நடையைக் கெடுக்கும் பிற்காலப் புது வழக்குகளான (நீர் என்பதனிடமாக) நீங்கள் என்பது போன்ற இரட்டைப் பன்மைகளையும் விலக்கியிருப்பதும், செய்யுள் வழக்கிற்குரிய சுருங்கச் சொல்லலும், சிக்கலான நடையுமாயில்லாமலிருப்பதுங் குறிப்பிடத்தக்கதாம். தெலிங்காணத்திலும் கர்நாடகத்திலும் (தெலுங்கு, கன்னட எழுத்துக்களால் எழுதப்பட்டிருந்த போகிலும்) அம் மொழிகளில் எழுதப்பட்ட ஒரு பழங்கல்வெட்டுக்கூடக் கிடையாமலிருப்பது தமிழிலக்கியத் திருத்தத் தொன்மையை ஒருபுறமும், அதன் தனிப்பட்ட சுதந்திர உணர்ச்சியை மற்றொரு புறமும் விளக்குவதாகும் என்று கொள்ளலாம்.

மேலும், டாக்டர் குண்டெர்ட்டால் மொழிபெயர்க்கப் பெற்று வெளியிடப்பட்ட மேற்குறிப்பிட்ட திருவாங்கூர், கொச்சிப் பட்டயங்கள் பழந்தமிழும் பழமலையாளமும் ஒரே மொழிதான் என்பதையும் நிலைநாட்டுகின்றன. இப்பட்டயங்களின் காலம் 9-ஆம் நூற்றாண்டுக்குப் பிந்தி இருக்க முடியாது; 7-ஆம் நூற்றாண்டுக்கு முந்தியும் இருக்க முடியாது. ஏனெனில், இவற்றுட் காணப்படும் (ஆரியபட்டரின் சூரிய சித்தாங்கத்தை ஒட்டி எழுந்த) ஞாயிற்றியல் சார்பான காலப்பாகுபாட்டை ஒட்டிய மரபுச் சொற்கள் 7-ஆம் நூற்றாண்டுகட்கு முன் ஏற்படவில்லை. இவை எழுதப்பட்ட காலத்து அரசரும் கரள அரசரேயாவர். எனினும்,