பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 திராவிட மொழிகளின்...எழுத்துச் சான்றுகள்

141

மயில்; வடமொழி மயூர). 'சிகி' (சிகையை உடையது) என்ற சொல்லும் வடமொழியில் வழங்குவதொன்றாம். ஆயினும், பழைய தூய தமிழ் - மலையாள மொழியில் இதற்குச் சரியான பொதுப் பெயர் "தோகை" (அழகிய தோகை அல்லது இறக்கைகளை உடையது) என்பதாம்.இதன் வேர்ச்சொல் தோக், துக் அல்லது தூக் ஆகும்; பினீஷியர் இதனைத் துக் என்றனர். இதன் உயிரொலி விவிலியக்குறிப்பில் குறில் கெடிலாக மயங்குவதும் தமிழ் வழக்கைத் தழுவியதே.

தோகை என்ற தொழிற்பெயரின் வேர்ச்சொல் தோக் அல்லது தூக் ஆயினும், இதன் மிகப் பழைமையான மூலவடிவம் தொ அல்லது து என்பதே என்று தோன்றுகிறது. பிற சொற்களுடன் ஒப்புமைப்படுத்தி நோக்க ஈற்றில் வரும் க் அல்லது கு ஒரு சாரியையே என்று காணப்படும். முதலில்) இச்சாரியை தொழிற்பெயர்விகுதியாயிருந்து பின் அதுவே ஒரு துணைப் பகுதி ஆயிற்றுப்போலும். இச்சொல்லின் பழைமைபற்றி மாக்ஸ்மூலர் இவ்விளக்கம் சரியாயின் ஆரியர் வருமுன் இந்தியாவில் வழங்கிய தமிழ்க் குழுவின் பழைமை இதனால் நன்கு விளக்கப்படும் ” என்று கூறுகிறார். இவ்விளக்கம் சரி என்பதிலும், அதன்மூலம் மாக்ஸ்மூலர் கொண்ட முடிவு சரியானதே என்பதிலும் ஐயமில்லை. இவ்விடத்தில் தோகை என்ற இத்திராவிடச் சொல்லோடு (ஒலிப்பு தோஹை) அரபு மொழி தவஸ், கிரேக்கம் தஒஸ், இலத்தீனம் பவோ, ஆங்கிலம் பீஃபௌல் என்பவற்றின் ஒப்புமை நோக்கத்தக்கது. இந்திய வணிகர் பாபிலோனியா (பவேரு, பழம் பாரசீகம் பபிரு) வரையிற் கடல் வழியாகச் சென்று அந்நாட்டில் முதல்முதலாக மயிலை விற்பனை செய்


1. Phoenicians. 2. Pea-fowl. 3. Baveru. 4. Babiru.