பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 திராவிட மொழிகளின்...எழுத்துச் சான்றுகள்

143

என்ற தமிழ்ச் சொல்லின் திரிபே. மலையாளத்திலுள்ள அரிசி என்னும் தமிழ்ச் சொல்லின் சிதைவே.

கிரேக்க மொழியின்கண்ணுள்ள முதல் திராவிடச் சொல் கார்ப்பியன் என்பதாம். தெஸியாஸ் என்பவர் இலவங்கப்பட்டைக்குக் கொடுத்த பெயர் இது. ஹெரடோட்டஸ் என்பவர் இலவங்கப்பட்டையைக் கார்ஃபியா” என்று கூறினர். அச்சொல் காய்ந்த சுப்பி என்று பொருள்படும். பினீஷியர்கள் அதனைக் கின்னமோமன் என்பர் ; இதிலிருந்தே ஆங்கிலக்கில் சின்னமன் என்பது வந்ததாகும். அரபு மொழியிலுள்ள கிர்ஃபாஹ் என்ற சொல்லுடன் கெலியாஸ் குறித்த கார்ப்பியன் என்ற சொல் நெருங்கிய தொடர்புடையதாயிருப்பது தெளிவு. திராவிடச் சொல்லாகிய கருவாப்பட்டை என்பதனுடன் அதற்குத் தொடர்பிருப்பதும் எளிதிற்றெளியப்பெறும். இந்தியாவைப்பற்றித் தாம் எழுதிய கட்டுரையொன்றில் கிரேக்கர் 'முரோரோதா' என்று குறிப்பது கார்ப்பியன் என்னும் இந்திய மரமே என்றும், அதிலிருந்து மணமுள்ள ஒரு நெய் எடுக்கப்படுகிறதென்றும் தெஸியாஸ் எழுதியுள்ளார். இது கருவாப்பட்டைத் தைலம் என்பது தெளிவு. ஆகவே அவர் குறித்தது தமிழ் மலையாளச் சொல்லாகிய கருப்பு அல்லது கரப்புத் தைலம் என்பதையேயன்றிச் சிங்கள மொழியில் வழங்கும் வட சொற்றிரிபாகிய குருந்து என்பதை அன்று. மலையாளத்தில் கருவாப்பட்டை நெய்க்குக் காப்புக் தைலம் என்றும், தமிழில் கருவாப்பட்டை மரத்திற்குக் கருவ, கருவா என்றும் பெயர்கள் வழங்குகின்றமையுங் காண்க.

மேலும் இச்சொல்லின் வேராகிய கரு-(கர்) என்பதற்குக் கருமைகிறமும், எரிப்பு என்னும் சுவையும் ஒருங்கே


1. Karpion, 2. Ptesias, 3. Karphea, 4. Kinnamomon, 5. Cinnamon, 6. Kirfah.