பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 திராவிட மொழிகளின்...எழுத்துச் சான்றுகள்

145

ஒட்டியதே. ஆனால், பிளைனி பின்னர்க் குறிப்பிட்டதும், பெரிப்ளூஸ் வரலாற்றிற் காணப்படுவதுமாகிய சொல் திராவிடச் சொல்லின் வடிவை யொட்டி வந்ததாகும். ஆன் ஈறும், இகரச்சாரியையும் பெற்றுப் பண்டியோன் என்று வழங்கும் அது தமிழ்ச் சொல்லாகிய பாண்டியன் என்பதை நெருங்கி யொலிப்பது தெளிவு. கன்னடத்தின் ஆண்பால் விகுதி அம் என்பதாகும்; தெலுங்கிலோ உடு என்பதாகும். இதனால் பண்டைக்காலத்தில் தமிழ்ச் சொல்லமைப்புக்கள் பிற திராவிட மொழிகளிலிருந்து மாறுபட்டிருந்தன வென்றும், ஆனால் அச் சொல்லமைப்புக்கள் இற்றைநாள் வரையில் தமிழில் அவ்வாறே மாறதிருந்து வருகின்றன என்பதும் இப் பாண்டியன் என்ற சொல்லிலிருந்து ஊகிக்கப்படும். மொதூர பெஸிலியோன் பாண்டியோனிஸ்[1] என்ற கிரேக்க மொழித் தொடரிலிருந்து கிறித்து பிறப்பதற்கு முன்னரேயே பாண்டியர்கள் தங்கள் தலைநகரைப் பொருநையாற்றின் கரையிலிருந்த கொற்கையினின்றும் வையையாற்றின் கரையிலிருந்த மதுரை நகருக்கு மாற்றிக் கொண்டார்கள் என்பதும் தெளியப்படும். வட இந்தியாவிலுள்ள மத்ரா என்பதை கிரேக்கர்கள் மெதொரா என்று குறித்துவந்தமை இங்கு நினைவு கூரற்பாற்று.

(2) சேரன் பெயரை டாலிமி, கேரொபொத்ரஸ்[2] என்றும், பிளைனி கேலோபொத்ரஸ் என்றும் குறிப்பிடுகின்றனர். இதுவும் வடமொழிப் பெயரே. ஆனால் வட மொழி கேரளபுத்ர என்பது மலையாளத்தில் கேர, கேல என்று சுருங்கி வழங்கும்.

(3) சோழன் பெயர் டாலிமியால் சோர என்ற உருவில் தரப்படுகிறது. இதன் வடமொழி உரு ஸோல, தெலுங்கு சோள. கிரேக்கச் சொல்லின் முதல் மெய்யான ஸ் என்பது


  1. Modoura Basileion Pandionis
  2. Kerobotstros