பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 திராவிட மொழிகளின்...எழுத்துச் சான்றுகள்

147

வின் இடையில் உயிர்களினிடையே நலிந்த திறந்த ஒலிப் புடையவையாயும், இாட்டித்தபோது கடுமையான ஒலி யுடையவையாயும் திராவிட வழக்கில் வருவதும் பழைமை யானவை என்பதற்கு இது சான்று தருகின்றது.

(5) கரூர் என்ற சேரன் தலைநகர் அப்படியே கரூர் என்று கிரேக்க ஆசிரியர் வழக்கிலும் காண்பதால் இதிலுள்ள தமிழ் ஒலிகள் கழிந்த மூவாயிரம் ஆண்டுகளிலும் இன்றும் ஒலிக்கப்படுவது போன்றே ஒலிக்கப்பட்டன என்பது விளங்கும். கரூர் என்பதில் கரு ஊர் என்ற இரு சொற்கள் உள்ளன. இாண்டும் தனித் தமிழ்ச் சொற்களே. இச் சொற்களின் பழைமையும் இதனால் உறுதிப்படுகிறது.

(6) மோடகலிங்கம் : மூன்று இலிங்கம் அல்லது மூன்று கலிங்கம் என்பது இதன் பொருளாகக் கொள்ளப்படுகிறது. இதனைக் குறித்த ஆராய்ச்சியை 41-ஆம் பக்கத்திற் காண்க! அப்படியாயின் தெலுங்கில் மூன்றுக்குச் சரியான சொல்லாகிய " மூடு " என்பதன் பழைமையையும் அதன்மூலம் தெலுங்கின் பழைமையையும் இது வலியுறுத்தும்.

(7) பியூட்டிஞ்சர் நிலப்படங்களிலும், ராவென்னா என்னும் நில இயல் ஆசிரியரின் நூலிலும் தமிரிகே,[1] திமிரிகே [2] என்ற பெயர்கள் காணப்படுகின்றன. இவை தமிழைக் குறிப்பிடுபவையானால் இப் பழங்காலத்திலேயே திராவிடம் என்ற பெயருக்குப் புறம்பாகத் தமிழ் என்ற பெயரும் வழங்கப்பட்டது என்பது உறுதிப்படும். தமிரிகேயின் வடக்கிலுள்ளது ஆரியகே என்பது பெரிப்ளுஸ் என்ற நூலிற் காணப்படும். வராஹமிஹிரர் மலையாள நாட்டின் வடக்கிலுள்ளது ஆரியகம் என்றனர். எனவே, மலையாளக் கரையின் தென்பகுதி (மலபார்) திராவிட அல்லது தமிழ் மக்கள் இடம் என்றும், வடபகுதி ஆரியர் பகுதி என்றும் ஏற்படும்.


1. Damirice. 2. Dymirice.


  1. 1
  2. 2