பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

(8) மலையாளக் கரையிலுள்ள ஒரு நகரின் பெயர் கிரேக்க மொழியில் மூஸிரிஸ் [1] என்று காண்கிறது. இது முயிரி அல்லது முயிரிக்கோட்டையாக வேண்டும். துண்டிஸ் என்றும், நெல்கிண்டத்திலுள்ள கிண்டா என்றும் இன்னும் இாண்டு நகரங்கள் குறிக்கப்படுகின்றன. முன்னது துண்டி ஆகும் ; பின்னது இன்றையக் கன்னெற்றி ஆகும் என்பது பேரறிஞர் குண்டெர்ட்டின் கூற்று.

(9) பிளைனி கூறும் கொத்தனா-பெரிப்ளுஸ் கொத்தனரிகே [2]-என்பது கோழிக்கூட்டின் பக்கமுள்ள கடத்தநாடு அல்லது தலைச்சேரிப் பக்கமுள்ள கொளத்த நாடு எனக் கொள்ளப்படுகிறது. கடத்தநாடு, கொளத்தநாடு இரண்டும் மிளகுக்குப் பேர்போனவை.

(10) மலையாளக் கரையில் மிளகு கொண்டு செல்லும் படகுகளைப் பெரிப்ளுஸின் ஆசிரியர் ஸங்கா [3] என்றும், அங்கிருந்து இலங்கைக்கும் கங்கை நாட்டிற்கும் செல்லும் கப்பல்களைக் கொலந்தியோஃபோந்தா [4] என்றும் கூறினர். பின்னதன் முதற் சொல் விளங்கவில்லை. முன்னதற் கிணையான மலையாளச்சொல் சங்காடம் என்பதும், தெலுங்குச் சொல் ஜங்கால என்பதும் ஆம்.

(11) கொத்தியாரா [5] என்பது டாலிமி கூறும் ஆய்காட் டிற்கும், பெரிப்ளுஸ் கூறும் பரலியநாட்டிற்கும் தலைநகராகும். ஆய் அல்லது பரலியம் என்பது கிட்டத்தட்டத் தென்திருவாங்கூர் என்னலாம். பியூட்டிஞ்சர் நிலப்படங்களுள் இந்நகரே கொத்தார என்னப்படுகிறது. இந்நகர் தென்திருவாங்கூரில் இன்றும் சிறந்த வாணிக நகரமாக விளங்கும் கோட்டாறு என்பதாம். இப் பெயர் கோடு + ஆறு என இரண்டு சொற்களாலானது. டகரம் இாட்டுதல் முத


1. NMouziris. 2. Kottonarike. 3. Sangara. 4. Kolandiophonta.

5. Kottiara.


  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5