பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 திராவிட மொழிகளின்...எழுத்துச் சான்றுகள்

149

லிய தமிழ் வழக்கின் பழைமைக்கும், தமிழ் ஒலிமுறையின் பழைமைக்கும் இப்பெயரே சான்று பகரும்.

(12) கொமரிய அக்ரன்[1]: இது குமரி முனைக்கு டாலிமி கொடுத்த பெயர். பெரிப்ளுஸில் இது கொமர் என்று அழைக்கப்படும். கேப் காமொரின் என்பது ஆங்கிலம். இது வடமொழிச் சொல்லாகிய குமாரியின் திரிபென்பர். ஆனால், கொமர் என்பது தமிழ் வடிவே. இங்கிலாந்திலுள்ள உவேல்ஸ் பகுதியில் கிம்ரி [2] என்று ஒர் ஊர் உள்ளது." கிம்ரி, கும்ரி, கிம்ரை என்றழைக்கப்படும் இப்பகுதி மக்கள் தென் இந்து ஸ்தானத்திலிருந்து பண்டைக்காலத்தில் இங்கு வந்தவர்கள். தென் இந்துஸ்தானத்தின் தென் கோடியிலுள்ள முனைக்குக் குமரி முனை என்ற பெயர் இச் சொல்லடியாகப் பிறந்ததேயாம்” என்று 1903-ல் வெளிவந்த வரலாற்றாராய்ச்சிக் குறிப்பொன்றனுள் காணப்படுகிறது.[3] தமிழிற் குமாரி என்பது குமரி என்றாகும். குமரிமுனையை யடுத்துள்ள மக்கள் இதனைக் குமர் அல்லது கொமர் என்றே கூறுவர். பெரிப்ளுளில் இப்பெயர் இவ்வடிவில் வழங்குவது வியப்பே. அகில் வருங் குறிப்பு : “ இதனையடுத்துக் கொமர் என்று ஓரிடம் உள்ளது. அங்கே ஒரு கோட்டையும், ஒரு துறைமுகமும் உண்டு. திங்களுக்கொரு முறை ஒரு பெண் தெய்வம் அங்கு வந்து நீராடிச் செல்லும் ; அப்போது திரளான மக்கள் அங்குக் குழுமி நீராடிச் செல்வர்". பண்டைக் காலத்திலேயே குமரி ஐந்து சிறந்த நீராடுந் துறைகளுள் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பியூட்டிஞ்சர் நிலப்படங்களில் குமரிமுனை குறிக்கப்படாதது விந்தையே.

(13) பாலிய என்றும், கரைய என்றும், ஆய் என்றும் கூறப்படுவது தென் கிருவாங்கூரை அடக்கிய பழைய அரசி


1. Komaria Akron. . 2. Cymri. 3. A Historical Souvenir issued on the occasion of the meeting of the British Medical Association at Swansea, 1903.


  1. 1
  2. 2
  3. 3