பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

துள்ள மகேந்திர மலையாய் இருக்கலாம். எனினும், இவ்வளவு வடக்கிலும் தமிழ்ப் பெயராகிய மலை இருப்பது குறிப்பிடத் தக்கது. இராஜமஹாலின் பெயராகிய மாலெர் அல்லது மலேர் மலையர் என்ற பொருளிலேயே வருதல் காண்க.

(23) க்லெமென்ஸ் அலெக்ஸாண்ட்ரினஸ்[1] என்பவர் புத்தரை புத்த என்றும், சமணரை (வடமொழி ஸ்ரமண) லெஸம்னாய் என்றும் கூறுகிறார். இப்பெயர்கள் வடமொழிப் பெயர்களேயாயினும் அவை தமிழ் உருக்களை ஒத்கிருத்தல் கவனிக்கத் தக்கது.

(23) கிரேக்க மொழியில் எடுத்துக் கூறப்படும் தென் இந்திய இடப்பெயர்கள் பலவும் ஊர் அல்லது ஊர என்று முடிவது தமிழ் ஊர் என்பதைப் பெரிதும் ஒத்திருக்கிறது. அதன் முன்வரும் ந்த், த்த், ம்ப் என்ற கூட்டு மெய்கள் கூட தமிழ் எழுத்துத் தொடர்பை மிகவும் நினைப்பூட்டுகின்றன. இத்தகைய பெயர்கள் 23 உள்ளன.

கிரேக்க மொழியில் எடுத்துக் காட்டப்படும் பெயர்களுட் சிலவற்றிலிருந்து தமிழ்நாட்டில் ஆரியப் பார்ப்பனர் புகுந்து பல இடங்களில் தங்களையும் கங்கள் பெயரையும் நிலை நிறுத்திவிட்டனர் என்பது புலப்படும். மதுரையும், பாண்டியனும் வடசொற்களே. கபேரஸ் (காவேரி) என்பதும் வடசொல்லாகக் கொள்ளப்படினும் உண்மையில் திராவிடச் சொல்லேயென்று கொள்ள இடமுண்டு. கொமரியா (கன்னியாகுமரி)வும் கோரு (இராமேச்சுரம்) வும் வட சொற்களே. பொதிகையடியில் ப்ரக்மே[2] வாழ்ந்ததாக டாலிமி கூறுகிறார். இஃது இன்றைய பிரமதேசம் என்ற பழைய நகரமாயிருக்கக் கூடும். டாலிமிக்குப் பல நூற்றாண்டுகட்குப் பின்பு - கிரேக்கர்களிடமிருந்து வந்த இந்திய வாணிபம்


1. Clemens Alexandrinus. 2. Brachme.


  1. 1
  2. 2