பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 திராவிட மொழிகளின்...எழுத்துச் சான்றுகள்

153

பாரசீகர்களிடம் கைமாறியதற்குப் பின்பு - எழுதப்பெற்ற

" கிறித்தவ ஊர் வரலாறு " என்ற நூலில் காஸ்மாஸ் இண்டிகோபுளுஸ்டெஸ் என்ற ஆசிரியர் தமிழ் ஊர்ப் பெயர்கள் சிலவற்றைக் குறித்துள்ளார். அவற்றுள், பூதோ பட்டின[1]மென்பது ஒன்று; டாலிமி முன்னர் இதனையே போதோ பேரோரா[2] என்று குறித்தனர். பட்டினம் என்பது திராவிடச் சொல்லே. இபின் பதுாதா குறிப்பிட்ட போத்ஃபட்டன் [3] என்பதும், நிக்கோலோ கோண்டி [4] குறிப்பிட்ட பூதேஃபிதானியா[5] என்பதும் இப் புதுப்பட்டினமே என்று கர்னல் யூல் ஆராய்ந்து காட்டியுள்ளார்.[6]

கிரேக்க நில இயல் நூலார் தென்னிந்தியாவின் மொழிகளைப் பற்றித் தெளிவான குறிப்புக்கள் ஒன்றுந் தரவில்லை. எனினும், அவர்கள் எடுத்துக் காட்டிய ஊர்ப் பெயர்களிலிருந்து சுவை பயக்கும் சில செய்திகளை அறியலாம். கிரேக்க ஆசிரியர்களின் நூல்களிலிருந்து கிடைக்கப் பெறும் திராவிட மொழிச் சான்றுகளே யாவரும் ஒப்பக்கூடிய பண்டைய சான்றுகளாகும். ஆகவே, அவற்றை நன்காராய்ந்ததிலிருந்து பெறக்கூடிய முடிபுகளாவன :

(1) கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாகத் திராவிட மொழிகள் மாறுதலின்றி வழங்கி வருகின்றன.

(2) இன்று காணப்படும் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற திராவிட மொழிகளின் பாகுபாடும், அம்மொழிகள் வழங்கிய நில எல்லையும் ஏறக்குறைய இதே நிலைமையில் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பும் இருந்து வந்தன.

(3) எழுத்து வடிவு வழக்கத்தில் வந்து விட்டது.

(4) இலக்கண அமைப்பு செம்மைப்பட்டு உறுதியுற்றது.


1. Poudo patana, 2. Podoperoura. 3. вodfattan. 4. Nicolo Conti.

5. Peudefitania. 6. Bombay Antiquary for August 1874,


  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5
  6. 6