பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

(5) கிரேக்க வணிகர்களின் வருகைக்கு முன்னரே இலக்கியங்கள் தோன்றிவிட்டன.[1]

(6) இவ்வாறு இரண்டாயிரம் ஆண்டுகளாக இம்மொழிகள் பெரிதும் மாறுபாடின்றி வழங்கி வருகின்றமை, இலக்கியத் திருத்தமுற்ற காலத்திலிருந்து ஆசிய மொழிகள் மாறுபாடின்றியே வளர்ச்சியுற்று வருகின்றன என்ற வரலாற்றுப் பொது உண்மைக்குச் சான்று பகர்வதாகும்.

திராவிட மொழிகள் யாம் கூறியபடி சித்திய இனத்தைச் சேர்ந்தவை என்பது உண்மையானல் அவை அவ்வின மொழிகளுள் மிகமிகப் பழைமையானவை என்பதில் ஐயமில்லை. திரு. நாரிஸ் என்பவர் சித்திய இன மொழிகளைப் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார் :

" மாகியர் மொழியில் 15-ஆம் நூற்றாண்டிற்கு முன் ஒன்றும் எழுதப்படவில்லை. உக்ரிய மொழியிலோ 50 அல்லது 60 ஆண்டுகட்கு முன் எழுத்தே கிடையாது. பின்னிஷ் வீரக் காப்பியமாகிய கலெவல[2] என்பது எக்காலத்தது என்று அளவிடுவதற்கில்லை. வாய்மொழியாகவே நெடுங்காலம் அது பயின்று வந்துள்ளதாதலால், காலத்திற்குக் காலம் அது மாறியே வங்கிருத்தல் வேண்டும்." நெஸ்தோரியக் கிறித்தவரிட மிருந்தே[3] உய்குர் [4] என்ற கீழைத் துருக்கியரும், அவர்களிடமிருந்து மங்கோலியரும் எழுத்துக் கலை பயின்றனர். எனவே, கிராவிட மொழிகளின் தொன்மைப் பண் புடன் ஒப்பிடக்கூடிய வேறு எம்மொழியும் சித்திய இனத்திலேயே இல்லை என்பது தெளிவு.


1. எகிப்தை உரோமர்கள் வென்று கைப்பற்றிய காலத்தேதான் கிரேக்க வணிகர்கள் இந்தியாவுக்கு வந்தார்கள். அகஸ்தஸ் என்னும் உரோம முடிமன்னரின் நாணயங்களே இங்தியாவில் அகப்பட்டுள்ள உரோம நாணயங்களுள் காலத்தால் முதன்மையானவையாம். இவற்றுள் முப்பதுக்கு மேற்பட்டவை மலையாளக் கரையில் கண்டெடுக்கப் பெற்றவை.

2. Kalevala, 3, The Nestorian Christians, 4. Uigurs.


  1. 1
  2. 2
  3. 3
  4. 4