பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/174

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 திராவிட மொழிகளின்...எழுத்துச் சான்றுகள்

155

ஆல்தாய்[1] மலைகளில் வாழ்ந்துவந்த பண்டைத் துருக்கியருக்குரியவை எனச் சீனரால் குறித்துவைக்கப் பெற்றுள்ள எட்டுச் சொற்கள் கிடைத்துள்ளன. இவை இன்றைய துருக்கியமொழியிலுங் காணப்பெறுவனவே. சித்திய இனமொழிகளில் மிகத்தொன்மைவாய்ந்த சொற்களாய்க் கிடைக்கப்பெற்றுள்ளன இச் சொற்களே. இந்த எட்டுச் சொற்களுள் மூன்று, இன்றேல், உறுதியாக இரண்டு சொற்களாவது திராவிடச் சொற்களே என்பதில் ஐயமில்லை. அம்மூன்று சொற்கள் கீழே காணப்படுவனவாம் :—

ஆல்தாய் அல்லது பண்டைத் துருக்கியம் இக்காலத் துருக்கியம் தமிழ்
கொரொ,
கொரி,
கான்
க்வரா,
கொரி,[2]
க்ஹான்[3]
கரு,
கிழ,
கோன் (கோ)

கடைசியிலுள்ள கோன் (கோ) என்பது கான், க்ஹான் என்பதனோடும், துருக்கோமங்கோலியச் சொல்லாகிய க்ஹாகன்[4] என்பதனோடும் நெருங்கிய தொடர்புடையதாயிருப்பது காண்க. ஒஸ்டியாக் மொழியும், உக்ரியன் மொழியும் க்ஹோன்[5] என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றன. பிற்காலத் தமிழ்க் கல்வெட்டுக்களிற் காணப்பெறும் வட சொல்லாகிய ராஜா என்பது பழைய தமிழ்க் கல்வெட்டுக்களிற் காணப்பெறவில்லை. அதற்குமாறாக, கோன், கோ என்ற சொற்களே காணப் பெறுகின்றன. இச்சொற்கள் இக்காலத்தமிழில் அருகியே வழங்கி வருகின்றன. செய்யுள்


  1. The Altai
  2. Gori
  3. Khan
  4. Khagan
  5. Khon