பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 திராவிட மொழிகளின்...எழுத்துச் சான்றுகள்

157

அமைப்புடன் ஒருங்கே அமைந்தனவாகக் கொள்ளுதல் வேண்டும். திராவிட மொழிகளுடன் ஒப்பிடக்கூடியவகையில் பிராகுவி மொழியிற் காணப்பெறும் சொல்லமைப்புக்கள், வேர்ச்சொற்கள் எல்லாம் காலத்தால் இன்னும் பல நூற்றாண்டுகள் முற்பட்டன என்று கொள்ளலாம். ஆகையால் இந்தப் பிராகுவிமொழியின் துணைகொண்டு திராவிடமொழிகளின் தொன்மை ஆரியர் வருகைக்கு (அஃதாவது கி. மு. 1600க்குப்) பல நாற்றாண்டுகட்கு முன்னென்று ஒருவாறு தெளியலாம்.