பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 அரசியல் வாழ்வியல் தொடர்புகள்

159

விற்குள் முதன்முதல் வந்தேறியோர் அவர்களே என்றோ கொள்வது கவறாகாது. கிராவிடர்களும் (தஸ்யூக்களாகிய) பழைய சூத்திர்ர்களும் ஓரினத்தவரே என்று சிலர் கருதுகின்றனர். ஆனால், திராவிடமொழிகள், தஸ்யூக்களின் மொழிகளினும் தொன்மை வாய்ந்தன என்பது கவனிக்கத்தக்கது. இதன்படி நோக்கினல், வடஇந்தியாவில் இப்பொழுது காணப்பெறும் சிக்கியச் சார்புடையவர்களும் ஆனால் ஆரியச் சார்பற்றவர்களுமான சூத்திார்களும், கலப்பினத்தவர்களும் திராவிடர்களுக்குப் பின் இந்தியாவிற்குட் புகுந்தவாாதல் வேண்டும்; இவர்கள் வருகையைக் கண்ட பண்டைத் திராவிடர்கள் வடஇந்தியப் பகுதிகளிற் பெரும் பகுதியை நீத்துத் தெற்கே போந்தவராதல் வேண்டும். இகையன்றி அவர்கள் ஆரியர்களால் துரத்தப்பட்டுக் தெற்கே குடியேறினர் என்று சொல்வதற்கு எட்டுணையும் ஆதாரமில்லை. என்ன ? சேர சோழ பாண்டியர் எக்காலத்திலாவது ஆரியர்களுக்கு அடிமைப்பட்டனர் என்றோ, வட இந்தியாவிலிருந்து ஆரியர்களால் துரத்தப்பட்டுத் தெற்கே போந்த பழங்குடியினரே பின்னர் சேரசோழபாண்டியகலிங்க ஆந்திர்ர்களாக மாறினர்கள் என்றே எந்த வடமொழிச் சான்றோ, தென்மொழிவரலாறோ குறிக்கக் காணவில்லை. திராவிடக் கண்ணாடிகொண்டு பார்த்தால் கிராவிடர்களுக்கும் ஆரியர்களுக்கு மிடையே என்றும் அமைதியும் நட்பும் பொருந்திய தொடர்பே இருந்து வந்ததென்றும், வரலாற்றுக் காலத்திற்குமுன் கிராவிடர்கள் வட இந்தியாவிலிருந்து துரத்தப்பட்டு கோண்டுவனம், தண்டகாாண்யம் முதலிய திராவிடக் காட்டுப்பகுதிகளிற் குடியேறினர்களென்றால், அவ்வாறு அவர்களைத் துரத்தியவர்கள் ஆரியர்களல்லர், அவர்களுக்கு முன்வந்த வேறு பழங்குடியினரே என்றும் தெரியவரும்.