பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

ஆரியர்களுக்கு முன்வந்த சித்தியர்களே திராவிடர்களைத் தெற்கே துரத்தியவர்களாதல் வேண்டும். இவர்களை வட இந்தியாவிலுள்ள கோலர்கள், சந்தாளர்கள்,[1] வில்லர்கள் [2], தோமர்கள் [3]" ஆகியவர்களோடு ஒன்றுபடுத்திவிடக் கூடாது. ஒருகால் ஆரியர் வருகைக்கு முன் மேற்குறிப்பிட்ட வகுப்பினர்கள் திராவிடர்களைக் கண்டு காடுகளிற் சென்று குடியேறியிருக்கக்கூடும்.

ஒருவேளை இப்பழங்குடிகள் வடமேற்குவழி வராமல், பூதான் குடிகள் [4] மாதிரி வடகிழக்கிலிருக்து வந்து வங்கத்தின் சதுப்பு நிலக்காடுகளைத் தாண்டி இங்கே குடியேறியிருக்கக் கூடும். எங்ஙனமாயினும் இக்காட்டுக் குடிகளது படையெடுப்பினால் கிராவிடர் தெற்கு நோக்கிச் சென்றிருப்பர் என்பது பொருந்தாது. மற்றும் வட இங்கியத் தாய் மொழிகளிலுள்ள ஆரியச் சார்பற்ற பகுதிக்கும் கோலேரிய மொழிகளுக்கும் ஒப்புமை பெரிதுங் காணப்படவில்லை. வட இந்திய ஆரியர் சூத்திரராக்கித் தம்முடன் சேர்த்துக் கொண்ட மக்கள் வகுப்பினர் பெருவாரியினராகவும், போர்த்திறனும், நாகரிகமும் உடையவராகவும் இருந்திருத்தல் வேண்டும். ஸெர்ஸீஸ் [5] என்ற பாரசீகப் பேரரசன் படையில் இந் தியாவிலிருந்து கோரைமயிரினரான எத்தியோப்பிய வீரர் (அஃதாவது கருநிறமக்கள்) வந்திருந்தனர் என ஹெரடோட்டஸ் என்ற கிரேக்க வரலாற்றறிஞர் கூறுகிறார். இவ் எதியோப்பியர் மேற்கூறிய சித்திய இனத்து மக்களாக இருக்கக் கூடும்.

இவ்விளக்கத்திலும் ஒரு தடங்கல் இல்லாமவில்லை. இன்றைய திராவிட மக்கள் வட இங்கிய ஆரியர் வயப்பட்ட சூத்திரரைவிடத் தன்னாண்மையும், நாட்டுப்பற்றும், அறிவாற்றலும் மிக்கவர்கள். ஆகவே, இவர்கள் தம்மினும்


1. Santhals. 2. Bhilse 3. Doms. 4. Bhutan tribes. 5. Xerxes.


  1. 1
  2. 2
  3. 3
  4. 4
  5. 5