பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/180

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 அரசியல் வாழ்வியல் தொடர்புகள்

161

குறைந்தவரான மக்களால் தம்முதலிடத்தினின்று துரத்தப் பட்டிருக்கக் கூடுமோ என்று ஐயமேற்படக்கூடும். ஆனால் திராவிடருடன் போரிடும்போது இந்தச் சித்திய மக்கள் இன்றைய நிலையிலில்லை. அவர்கள் திராவிடரையொத்த நாகரிகமுடையவரல்லராயினும் அவர்களைவிட வெறிமிக்க முரட்டு மனிதராகவே இருந்தனர். காலப்போக்காலும், ஆரியரால் அடிமைப்படுத்தப்பட்டும் அவர்கள் இன்று தற்பண்பு இழந்து விட்டனர். எனவே, முதலில் திராவிடர்கள் சித்திய முரட்டு மக்களுக்குத் தோற்றார் என்பதிலும், அந்தச் சித்திய மக்கள் தம் முரட்டுத்தனம் இழந்தபின் ஆரியருக்குத் தோற்றார் என்பதிலும், அங்ஙனம் தோற்று அடிமைப்பட்ட ஸுத்திரரைவிடத் தன்ணாண்மையுடன் தெற்கில் ஆட்சி செலுத்திய திராவிடர் நாகரிகமிக்கவர்களாக விளங்கினர் என்பதிலும், பின்னர் ஆரியர்கள் போர்செய்து வெற்றியுறாமல் வங்கேறிகளாகக் தெற்கே போந்தபோது, அவர்களுடன் கலந்துறவாடி மேன்மையுற்று ஆரிய அரசுகளை யொத்த கிராவிட அாசுகளைத் தெற்கே' நிலைநாட்டினர் என்பதிலும் நம்பக்கூடாத செய்தி ஒன்றுமில்லை.

கர்ஸன் என்பவர் " தமிழர் ஆரியாவர்த்தம் அல்லது வட இந்தியாவில் என்றும் இருந்திலர்; மலாய் மக்களினத்தைச் சேர்ந்தவராய், கடல்வழியாக வங்காளவிரிகுடாவைக் கடந்து நோாகவோ இலங்கை மூலமாகவோ வந்தனர் " என்றார்[1] .இது முற்றிலும் பொருத்தமற்றது. ஏனெனில், தமிழ் எவ்வளவு திராவிடத்தைச் சேர்ந்ததோ அவ்வளவு கோண்டு, கு முதலியவையும் திராவிடமேயாம் ; ஒராவோனும் இராஜமகாலும், இன்னும் தெளிவாகக் திராவிடமேயாம். பிராகுவி வடமேற்கில் திராவிட மொழியுடன் இணைப்புடையதாயிருக்கிறது. பெஹிஸ்தன் பட்டயங்களையோ, சித்திய


  1. 1. Journal of the Royal Asiatic Society Vol. XVI.

11