பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

உறவுகளையோபற்றிச் சொல்லவேண்டியதில்லை. மேலும், டாலிமியின் காலத்தில் - இந்தியாவிலுள்ள மக்கள் அனைவரும் அமைதியாக வாழ்ந்துவரும் நிலையிலிருந்த காலத்தில் - திராவிடர் தென்கீழ்க்கரை மட்டுமின்றிக் கங்கையாறுவரை ஆட்சி செலுத்தியிருந்தனர் என்பதும் குறித்தற்பாற்றாம்.

இலங்கையிலிருந்து அவ்வப்போது தென் இங்கியாவிற்கு மக்கள் வந்து குடியேறியுள்ளனர் என்பது மறுக்கக் கூடாததே. இன்று கிருவாங்கூரிலுள்ள தீயர், ஈழவர் முதலியவர் இவ்வகையினர் ஆவர். தீயர் என்பது உண்மையில் தீவர் என்பதன் மரூஉவே. ஈழவர் என்பதன் பொருள் ஈழம் அல்லது இலங்கையிலிருந்து வங்தோர் என்பது. ஈழம் என்பது இலங்கையின் தமிழ்ப் பெயர். இது ஸிம்ஹலம் என்ற வட சொல்லிலிருந்தோ, ஸீஹலம் என்ற பாலிச் சொல்லிலிருந்தோ வங்கிருக்கவேண்டும். உண்மையில் இக் குடியேற்றங்கூட இலங்கைக்குள் தமிழர் குடியேறியதன் எதிரொலியேயாகும். சோழியர், பாண்டியர் முதலிய தமிழர் அடிக்கடி நாட்டின்மீது படையெடுத்ததையும், ஒரு தடவை அரசாட்சியையே கைப்பற்றியதையும் மஹாவமிசம் என்ற சிங்கள வாலாற்று நூல் கூறுகிறது. இத்தகைய படையெடுப்பின் பயனாக, இன்று, தமிழர் வட மாகாணம் முழுமையும் வாழ்ந்துவருகின்றனர். ஆனால், சிங்களர் வேறு, தமிழர் வேறு என்பதில் ஐயமில்லை. சிங்களரே தாம் மகதநாட்டினின்று குடியேறியதாக ஒப்புக்கொள்கின்றனர். எனவே, தமிழர் யாவருமே இலங்கையிலிருந்து வந்திருக்கக் கூடும் என்பதை எவரும் ஒப்புக்கொள்வதற்கில்லை.