பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

ஆரியர் முதலிலிருந்தே தம்மிடையே அடிமைகளையும் பணியாளர்களையும் உடையவாாயிருக்கிருக்க வேண்டும். ஸ்லவோனிய அடிமைகள் ஸ்லவோனியாேயாகவும், மாகிய அடிமைகள் மாகியரேயாகவும் இருப்பது போல, ஆரிய அடிமைகளும் முதலில் ஆரியரேயாய் இருங்திருத்தல் வேண்டும். அங்ஙனமின்றேல் பாகதங்களிலும் இன்றைய வட இங்திய மொழிகளிலும் இவ்வாறு பெருவாரியான வட சொற்கள் இருக்க இடமில்லை. -

கிராவிடர் இந்துக்களானது போரில் தோல்வியடைந்ததாலன்று ; அமைதியோடு கூடிய ஆரியக் குடியேற்றத்தாலும், நாகரிகக் கலப்பினாலுமே. தென் இங்தியாவின் மேல் ஆரியர் படையெடுத்தகாகவோ, திராவிடரைக் கீழ்ப்படுத்தியதாகவோ மாபுரை இல்லை; அங்ஙனம் ஏதாவது நடந்திருந்தால் அது மக்கள் மனத்தில் உறுத்திக் கொண்டே இருந்திருக்குமாதலால், மரபுரைகள் இல்லாமலிருக்க வகையுமிராது. இதற்கு நேர்மாறாக, நமக்குக் கிடைத்துள்ள மரபுரைகள் அனைத்தும், ஆரியரைக் குறிக்க இந்நாட்டில் எழுந்த பார்ப்பார் (அதாவது சமய மேற்பார்வையாளர்), ஐயர் (தலைவர்) என்ற பெயர்களும் அவர்களது வெற்றி உடல்வலியால் ஏற்பட்டதன்று, அறிவாலும், ஆட்சித் திறனாலுமே ஏற்பட்டது என்பதைக் காட்டும்.

போர்வீரர்கள் திராவிட நாட்டிற்குள் வங்ததாக ஏதேனும் மரபுரை உண்டானால் அது (சூரிய குலத்திலுதித்தவர்களான) சங்திரகுலத்தைச் சார்ந்த மாபாாத வீரர்களாகிய பாண்டவர் தொடர்பு, பெயரளவிலேனும், மதுரை அாசனாகிய பாண்டியனுக்குண்டானதுதான். இதனாலேயே பாண்டிய அரசர் வடநாட்டுப் போர் வீர(ஷத்திரிய) மரபைச் சேர்ந்தவர் என்று கூறிவிட முடியாது. ஏனெனில், இக்கதையில் இரண்டாம் பாண்டியன் மகளை மணந்தவன் பாண்டியருள்