பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

துறைகளிலும், கடற் றுறைமுகங்களிலும் காணப்பெறுப வையே. பெரும்பாலும் இவை புத்தர்களால் வழங்கப்பெற்றவை போலும்’ என்றும் பர்னெல் கூறுவர். பார்ப்பன் நாகரிகம் புகுந்த காலமும், தமிழ் இலக்கிய வளர்ச்சி ஏற்பட்ட காலமும் வேறு வேறானவையாம். பிந்தியது சமணரது முயற்சி ஆகும். ஆனாலும், திராவிட இலக்கியத்தைச் சமணர் முழு உருவாக்கினலும் அதன் கருத் தோற்றத்திலேயே பார்ப்பனத் தாக்கு ஏற்பட்டமை தெளிவு. உண்மையில் சமணர்கள் கூட திராவிட மொழிகளைச் செப்பனிட்டுப் பார்ப்பன மொழியாகிய வடமொழிக்குப் போட்டியாக்கும் வரை முதன் முதலில் தென்இந்தியாவிலும் சரி, வடஇந்தியாவிலும் சரி, வடமொழியையே பயன்படுத்தி வந்தனர். இதற்கேற்ப முதல்முதல் ஆரியச் சார்புடையவையாய்க் காணப்படும் இடப் பெயர்கள் பெரும்பாலும் பார்ப்பனச் சார்போ, புத்தச் சார்போ இல்லாதவையாய்க் காரணப் பெயர்களாகவே இருக்கின்றன. இரண்டுமட்டும் இவற்றுள் தெளிவான பார்ப்பனச் சார்புடையவை: ஒன்று குமரி; மற்றொன்று யாதவர் தலைநகராகிய வடமதுரையைப் பின்பற்றி இடப்பட்ட பெயராகிய மதுரை.

பினீஷியர்களும், சாலமன் மன்னரின் பணியாளர்களும் மலபார்க் கரையோாம் உவரி[1] வரைச் சென்று நடத்திவந்த கப்பல் வாணிபத்தில் சிந்து நதிக் கரையில் வாழ்ந்திருந்த ஆரிய வணிகர்களும் பங்கு கொண்டு உடன் சென்றவர்களாதல் வேண்டும். இந்த உவரி என்பது இந்தியாவின் மேற் கரையிலுள்ளதே யென்றும், ஆப்பிரிக்காவில் அப்பெயருடைய இடமில்லை என்றும் எர்னெஸ்ட் ரெனன்[2] என்பவர் கூறியதாக சர் எம். இ. கிராண்ட் டஃப்[3] எழுதுகிறார்.


  1. Ophir
  2. Prof. Ernest Renan
  3. Sir. M. E. Grant Duff in his Life of Ernest Renan, Professor of Semitic Languages of the College of France