பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிரியர்ஸன் மொழியாராய்ச்சிக் குறிப்புக்கள்



க. திராவிடப் பெருங்குழு


இந்கியப் பெருநாட்டிலுள்ள மக்கட் டொகுதியை ஆராய்ச்சிமுறையில் வகுத்து, இனம் பிரித்துப் பொது வியல்பு சிறப்பியல்புகளை வரையறை செய்ய முயன்ற ஆராய்ச்சி யறிஞர்கள் அஃது எழுவகைத்தாய குழுஉக்களைக் கொண்ட ஒரு தொகுதியாகும் என்று முடிவுகட்டினர். அவை வருமாறு:—

(1) துருக்க-ஐரானியர் (2) இங்கிய-ஆரியர் (3) சித்தியக் திராவிடர் (4) ஆரியத் திராவிடர் அல்லது இந்துஸ்தானி (5) மங்கோலியத் திராவிடர் அல்லது வங்காளி (6) மங்கோலாய்ட் (7) திராவிடர்.[1]

இவ்வேழனுள் இறுதியவராயுள்ள திராவிடர் என்ற குழுவினர் ஒரு காலத்தில் இலங்கைத்தீவு தொட்டுக் கங்கையாற்று வெளிகள் வரையிற் பரவி வாழ்ந்துவந்திருந்தனர் என்று பொதுவாகத் தெரிகிறது. சிறப்பாகச் சென்னை மண்டிலத்திலும், ஐதராபாத் பகுதியிலும், மத்திய மண்டிலங்ளிலும்[2], சோட்டாநாகபுரியிலும் [3] அவர்கள் பெருந்தொகுதியினராக நிறைந்து வாழ்ந்திருந்தார்கள் என்று அறியக் கிடக்கின்றது. இப்பெருங் குழுவினரின் குழுஉச் சிறப்பியல்புகளை இக்காலத்தில் மலையாள நாட்டிலுள்ள பணியர்[4]களிடத்திலும், சோட்டாகாகபுரியிலுள்ள சந்தாளர்களிடத்திலுங் [5] காணலாம். திராவிடக் குழுவினர் உயரத்திற்


  1. 1. Turko-Iranian, Indo-Aryan, Scytho-Dravidian, Aryo-Dravidian or Hindustani, Mongolo-Dravidian or Bengali, Mongoloid, Dravidian.
  2. 2. Central Provinces.
  3. 3. Chota-Nagpur.
  4. 4. Paniyans.
  5. 5. Santals,

12