பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/200

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨. திராவிடப்பெருங்குழுவினரே முதுகுடிகள்

திராவிடர்களுடைய குட்டை உருவமும், கறுத்ததோலும், நீண்ட தலையும், அக்ன்ற மூக்கும், சற்று நீண்ட முன்கையும் அவர்களை ஏனைக் குழுவினர்களினின்றும் வேறு பிரித்துக் காட்டுவனவாகுமென்று மேற்கூறினோம். இக்குழு உச் சிறப்புக்களையே துணையாகக்கொண்டு, ஹக்ஸ்லி[1] என்பார் ஆஸ்திரேலிய[2] நாட்டு முதுமக்களுடன் தொடர்பு பூண்டவர்களே திராவிடர்கள் என்று கூறிய கூற்றுக்கு அரண்கோல ஒருசிலர் முயல்வர். முண்டாரி[3] மொழிக்கும் ஆஸ்திரேலிய மொழிகள் சிலவற்றிற்கும் எண் முறையில் காணப்படும் சில ஒற்றுமைகளையும், தென்னிந்தியாவில் மாய்ந்து மறையும் நிலையிற் காணப்படும் வளைதடிகளின்[4] வேறுபாடுகளையும் அவர் தம் கூற்றுக்கு உறுதுணையாகக் கொள்வர்.

மடகாஸ்கர் [5] தீவிலிருந்து மலேயாத்[6] தீவுகள் வரையிற் பரந்து கிடந்து, இந்திய நாட்டை ஆஃபிரிக்காவுடனும், [7] ஆஸ்திரேலியாவுடனும் இணைத்திருந்த பெருநிலப் பகுதியாகிய இலெமூரியா [8] என்றொன்று இருந்ததென்றும், அப்பகுதியில் வாழ்ந்தவர்களே திராவிடர்களென்றும் ஸ்க்ளேட்டர்[9]என்பார் ஊகத்தாற்கூறிய கொள்கையோடு தொடர்புபடுத்த மற்றொரு சாரார் முயல்வர்.

எனினும், ஆஸ்திரேலியப் பண்டை மக்களின் மண்டையோடுகளையும், பண்டைத் திராவிட மக்களின் மண்டையோடுகளையும் ஒப்புநோக்கி ஆராய்ச்சிசெய்த ஸர் உவில்லி


  1. Huxley.
  2. Australia,
  3. Mundari.
  4. Boomerang.
  5. Madagascar.
  6. Malay Archipelago.
  7. Africa.
  8. Lemuria.
  9. Sclater.