பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/202

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 திராவிடப்பெருங்குழுவினரே முதுகுடிகள்

183

இவ்வடிப்படைதானும் வலுவற்ற தொன்றன்றென்று கூறவும் வேண்டுமோ? அன்றியும், மொழிவேற்றுமை, ஒற்றுமைகளையே கருவியாகக்கொண்டு ஒரினத்தாரைக் கோலேரியரென்றோ, கிராவிடரென்றோ இரு பிரிவினராகப் பிரிக்க முயல்வது அறிவியன்முறைக்கு ஒவ்வாததொன்றாமன்றா? இருதிறத்தினரின் உடலமைப்புக்களில் எத்தகைய தீர்ந்த வேறுபாடுகளுங் காண்டற்கில்லை யாதலின் மேற்குறித்த கொள்கையையேற்றுக்கொள்ளலரிதாகின்றது. அதுவுமன்றி, மஞ்சள்நிற மேனியும், பெரிய தலைகளும் வாய்ந்த மக்கட் குழுவினரே வதிந்துவரும் நிலப்பகுதி யொன்றிலிருந்து, கருநிறமும், நீண்ட கலையமைப்புமுடைய ஒரு பெருங் கூட்டத்தினர் புறப்பட்டு வந்தனர் என்பது நம்பத்தக்கதொன்றாமோ?

எனவே, இமயத்திற்கு அப்புறமிருந்து திராவிடர்கள் இந்தியாவிற்குள் வந்திருத்தல் வேண்டுமென்று கொள்ளும் கொள்கைகளுக்கு அறிவியன் முறைப்படி நம்பத்தக்க எத்தகைய ஆகாரமுமிருப்பதாகத் தோற்றவில்லை. இந்தியாவில் இந்நாளிலும் திராவிடர்கள் வாழ்ந்து வருவதாகக் கொள்ளப்படும் நிலப்பகுதிகளின் இயற்கை யமைப்பையும், அவர்களுடைய தனிப்பட்ட பண்டைய உடலமைப்புக் குறிகளையும், உயிருண்மை[1] தெரிக்கும் அவர்களுடைய சமயத்தையும், சிறப்பியல்பு பொதுளும் மொழிகளையும், கற்றச்சுவேலைகளையும், கொன்மைக் கறிகுறியான குல தெய்வ வழி பாட்டையும்[2] நோக்கினால் அவர்கள்தாம் இந்தியாவின் முது குடிகள் என்று கொள்வதே சிறப்புடைத்தாகும்.


  1. 1. Animistic religion.
  2. 2. Totemism.