பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௩. திராவிடப் பெருங்குழுவியல்பு


மக்கட் டொகுதியமைப்பு முறையை ஆராய்ந்து காண்போமாயின், தனிப்பட்ட வகையில் மக்கள் என்றும், நெருங்கிய உறவினராய மக்கள் பலர் ஒன்றுசேர்ந்த குடும்பம் என்றும், பலகுடும்பங்கள் சேர்ந்த கிளை யென்றும், பலகிளைகளைக் கொண்ட இனம் என்றும், பல இனங்களாலாய குழுவென்றும், பல குழுக்கள் அடங்கிய பெருங்குழு வென்றும் நிரல்பட விளங்கக் காணலாம். நடைமுறையில் சிக்கல்கள் ஏற்படாவாறும், தெளிவு கருதியும் இவ் வகுப்பினை மக்களால் தேர்ந்து கொள்ளப்பட்ட தொன்றாகும். தொழிலொற்றுமை, உறவுமுறை, அடிமையாப்பு முதலிய பற்பல ஏதுக்களை முன்னிட்டு மக்கள் இவ்வகுப்பினையை மேற்கொண்டனர். தொழில் கருதிப் பெயர் பூண்டுள்ள பிரிவினர்களும், தம் முன்னேர்களின் பெயர்களையே சிறப்புப் பெயர்களாக அமைத்துக் கொண்ட குடும்பத்தினரும், இன்னும் இவைபோன்ற பல ஏதுக்களை முன்னிட்டுத் தனித்தனியாய்ப் பெயர் பூண்டுள்ள பற்பல குடும்பத்தினர்களும் ஒரே குலப்பெயரை யுடையாாயிருக்கல் கூடும். இக் குலத்தினரிடை வழங்குவது பெரும்பாலும் ஒரே மொழியாக இருத்தலும் கூடும். ஒரு குடும்பத்தினர் தங்குடும்பத்தினர்க் குள்ளேயே கொள்வனை கொடுப்பனை வைத்துக் கொள்ள வேண்டுமென்ற கட்டாயமில்லை; ஆனால் இயன்ற வரையில் ஒரே குலத்தினுக்குள் அவ்வாறு செய்துகொள்ளல் வேண்டும். இவ்வியல்பே இந்தியநாட்டின் பண்டைப் பெருங்குடிகள் பலரிடத்துங் காணப்பட்ட தொன்றாகும்.

இனி, இத்தகைய பல இனங்களை யுட்கொண்ட திராவிடக் குழுவைப்பற்றிச் சிறிது ஆராய்வோம். திராவிட