பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/206

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 திராவிடப் பெருங்குழுவியல்பு

187

வேளாகர், ஆஃப்கானிஸ்தானத்தைச் சேர்ந்த வேளாகர், கேத்திரர்கள்,[1] ஆஃப்கானியர், [2]ஜாதர் முதலிய பல்வேறு குலத்தவர்கள் இப்பிரிவினுள் இடம் பெற்றவர்களே. இவர்கள் மத்திய ஆசியாப் பகுதியைச் சேர்ந்தவர்களென்று கருதப்படுபவர்கள்.

இனி, பிராகுவியர், வேளாகர் என்ற இருபிரிவினர்களும் தாய்வழி முறையே சிறந்தவழி முறையென்று கருதிச் சிறப்பிக்கும் கொள்கையர்கள் ; ஆகவே, பெண் மக்களுக்கு ஏற்றங் கூறுபவர்கள். ஆஃப்கானியரோ,தாயினுஞ் சிறந்தது தந்தை வழிமுறையென்று கருதுபவர்கள் : அதனல் பெண் மக்களை விலைபடுபொருள் எனக்கருதி நடத்தி வருபவர்கள் ; பெண்களைப் பொருள்கருதி அடிமைகளாக விற்பவர்கள்.


  1. 1. Khetrans.
  2. 2. Jats.