பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௪. திராவிட மொழிகள்


இந்தியப் பெரு நாடெங்கணுங் திராவிடப் பெருங்குழு பரவிப் படர்ந்திருந்தது உண்மையே. எனினும், அப்பெருங் குழுவைச் சேர்ந்த மக்களியாவரும் திராவிட மொழியினத் தைச் சேர்ந்த மொழிகளையே பேசி வந்தார்களென்பதில்லை. வடபால் அமைந்தோர் பின்னர்த் தம்மை அடிமைப்படுத்திய ஆரியர் நாகரிகத்தில் இயல்பாய்ச் சிக்குண்டு, முற்றிலும் ஆரியராகவே மாறி, ஆரிய மொழிகளையே பேசி வருவாராயினர்; எனினும், ஆராய்ந்தால் எளிதில் வேறு பிரித்துக் காணக்கூடிய திராவிடக் குழுஉச் சிறப்பியல்புகளை அவர்கள் முற்றிலும் இழவாதவர்களாகவே இருந்துவருகின்றனர்.

இனி, வடபாலுள்ள இவ்வாரியக் கலப்பினரை யொழித் துவிடின், முண்டா மொழியினத்தைச்[1] சேர்ந்த மொழிகளைப் பேசி வருவோர்களிற் பெரும்பான்மையோரும், திராவிட மொழியினத்தைச் சேர்ந்த மொழிகளைப் பேசிவரும் ஏனையோரிற் பெரும்பான்மையோரும் திராவிடர்களே என்று ஒருவாறு துணிந்து கூறலாம். ஒரே திறப்பட்ட உடலமைப் பியல்பு வாய்ந்த மக்களால் இந்த ஈரின மொழிகளும் பெரும்பாலும் பேசப்பட்டு வருகின்றமை கொண்டு, முண்டா மொழியினத்திற்கும் திராவிட மொழியினத்திற்கும் தொடர் புண்டென்று கருதினர் அறிஞர் பலர்; எனினும், இந்திய மொழியாராய்ச்சி யளவைக் கழகத்தினர்[2] இடைவிடாது அரிதிற் றெடர்ந்து நடத்திவந்த ஆய்வுகளின் பயனாய் அக் கருத்துத்தானும் நிலைபெரு தாயிற்று. சொற்களின் ஒலிப்பு முறையையாதல், ஆக்கமுறையையாதல் ஆராய்ந்து


  1. 1. The Munda.
  2. 2. The Linguistic Survey of India.