பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௬. முண்டா மொழிகள்


முண்டா மொழிகளைக் “கோலேரிய[1] மொழிகள்” என்றும் அழைப்பதுண்டு ; அவ்வாறழைப்பது பிழைபட்ட தொன்ருகுமென்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். இம் மொழிகளுக்கு முண்டா மொழிகள்[2] : என்ற இனப்பெயர் வகுத்தவர் பேராசிரியர் மாக்ஸ்முல்ல[3] ரேயாம். இந்தியாவில் தொன்றுதொட்டுப் பேசப்பட்டு வருவதாகக் கருதப்படும் மொழிகளுள் இம்மொழியினமும் ஒன்று ; இவ் இனமே பண்டைய இந்தியமொழி யென்று கருதுவோரு முளர். இம் மொழிகளுக்கும், மலாக்கா[4], ஆஸ்ட்ரலோனேஷியா[5] , நக்க வாரத் தீவுகள்[6] முதலிய கீழை இந்தியப்பகுதியில் வசித்து வரும் பண்டை மக்கள் சிலர் பேசும் மான்குமேர்[7] மொழியினத்திற்கும் வெளிப்படையாகத் தொடர்பேதுங் காணப்படுகின்றதில்லையாயினும், பொதுப்படையா நோக்கின் ஒரு புடை யொற்றுமை யிருப்பது புலனாகும். இவ்வொற்றுமை காரணமாகப் பண்டொரு காலத்தில் இந்தியாவின் பெரும் பகுதியிலும், கீழை யிந்தியப் பகுதியிலும் பொதுமொழி யொன்று வழங்கியிருந்திருத்தல் வேண்டுமென்று கொள்ளுதல் மிகையாகாது. அப் பொதுமொழிச் சுவடுகள் முண்டா மொழி யினங்களுள் இக்காலையளவும் நன்கு காணக் கிடைக்கின்றன ; ஆனால், கீழை யிந்தியப் பகுதிகளிலோ, அடுத்தடுத்துத் தொடர்ந்து நிகழ்ந்த பிறமொழிக் கலப்பினல் அவை காணப்படாவாயின ; ஆங்காங்கு ஒன்றிரண்டு


  1. 1. Kolarian
  2. 2. Munda languages.
  3. 3. Prof. Max Muller.
  4. 4. Malacca.
  5. 5. Australonesia.
  6. 6. Nicobarese.
  7. 7. Mon–Khmer.