பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 முண்டா மொழிகள்

199

குறிப்பாகத் தென்படுவதைக் கொண்டு பொதுமொழி ஆண்டுப் பயின்றிருந்தமை தெளியப்படும்.

முண்டா மொழிச் சொற்கள் அடுக்கியல் முறையாலியன்றனவே. இப் பண்டைச் சிறப்பு முறையை அவை எத்தகைய திரிபுமின்றி இன்றுங் கொண்டுள்ளன. ஒன்றன் பின்னொன்றாக அசைகளைச்சேர்த்தடுக்கி அமைக்கப்படும் ஒரு சொல் முழுச் சொற்றொடர் ஒன்றற்குரிய பொருளனைத்தையுங் கொண்டிலகுவதாகும். உயிருள்ளவற்றிற்கும் உயிரில்லவற்றிற்கும் பால் வேறுபாடு உண்டே தவிர, உயர்திணை அஃறிணைப் பாகுபாடு முண்டாமொழிகளி லில்லை. அம்மொழி யினங்களில் ஒருமை, இருமை, பன்மை ஆகிய மூவகை எண்கள் உண்டு. வேற்றுமை யுருபுகள் வினைச்சொற்களுடன் சேர்க்கையுறுவனவேயன்றி, பெயர்ச்சொற்களுடன் சேர்ந்து தொழிற்படுமாறில்லை. கணக்கீடு முறையில் இருபஃது இருபஃகாக எண்கள் கணக்கிடப்படுமேயன்றிப் பத்துப்பத்தாகக் கணக்கிடப்படுவதில்லை. தன்மைப்பன்மைக்குமட்டும் திராவிட மொழியினத்தைப் போன்று, முன்னிலையை யுட்படுத்தியதும், விலக்கியதுமாய இருவகைத்தாய சுட்டுப்பெயர்கள் அமைந்துள. முண்டா வினைச்சொற்றிரிபுமுறைக்கும் திராவிட வினைச்சொற்றிரிபுமுறைக்கும் ஒற்றுமையேதுங் கிடையாது. வினைச் சொற்களும் எளியனவாய் அமைவனவல்ல. எதிர்மறை வினைகள் முண்டாமொழிகளிற் கிடையா.

முண்டா மொழியினம் பயின்றுவரும் பகுதிகளிற் றலையாயது சோட்டாநாகபுரியே யாகும். வங்காளம், ஒரிஸ்ஸா, சென்னை மண்டிலங்களை யொட்டிய சிற்சில கோட்டங்கள் ஆகியவற்றில் இவ்வின மொழிகளைப் பேசும் மக்கள் காணப்படுகின்றனர். பீகார் மண்டிலத்தின் மேற்கே நெடுந்தொலைவி லுள்ள மகாதேவ மலைகளில்[1] இம் மொழிக்குரிய ஒரு குழு


  1. Mahadeo Hills