பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/221

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202

கிரீயர்ஸன் மொழியாராய்ச்சிக் குறிப்புக்கள்வகைக் குறவர்களால் இம் மொழி பேசப்பட்டு வருகின்றது. அம் மக்கள் அணிந்து கொள்ளும் தழை உடை காரணமாக இது பத்வா[1] என்றும் அழைக்கப்படும்.

சவராவும், கடபாவும்:

ஒரிஸ்ஸா எல்லையை யொட்டிச் சென்னை மண்டிலத்தில் சவராவும், கடபாவும் பேசப்பட்டு வருகின்றன. இவ்விரு மொழிகளும் தெலுங்குமொழியுடன் இக்காலை பெரிதுங் கலந்துவிட்டன என்று கூறல்வேண்டா. கறியா, ஜுவாங் என்ற இரண்டினோடு இவற்றையும் ஒருவகையிற் சேர்த்துக் கொள்ளலாம். சவராமொழி பேசுவோராகிய சவரர்கள் மிகமிகத் தொன்மை வாய்ந்தவர்கள். பல இடங்களிற் படர்ந்து பரவியிருந்த இக் குழுவினர் வேதகாலத்திலிருந்த இந்திய-ஆரியர்களுக்கு[2] அறிமுகமானவர்கள். பிளைனி[3], டாலிமி[4] என்ற இரு மேனாட்டு வரலாற்றாசிரியர்களும் இவர்களைக் குறித்து எழுதியுள்ளார்கள். ஆனல், இக்காலை, இக்குழுவினரில் மிகவுங் குறைந்த தொகையினரே தம் மொழியாகிய சவராவைப் பேசிவருகின்றனர்.

முண்டாமொழியினத்திற்கே பொதுவாக வரிவடிவங் கிடையாது; இலக்கிய மென்பதுமில்லை.


  1. Patua
  2. Indo-Aryans
  3. Pliny
  4. Ptolemy