பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/223

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204

கிரீயர்ஸன் மொழியாராய்ச்சிக் குறிப்புக்கள்கலக்கநேரிட்ட போதெல்லாம், பின்னையதாகிய உள்நாட்டு மொழியே தன் தனிச்சிறப்பிழந்து கேடுறுகின்ற தென்பது மொழி நூலுண்மைகளுள் ஒன்றாகும். வங்தேறிகளாய ஆரியர்கள் உள்நாட்டுப் பண்டை மொழிகளைக் கற்றுப் பேச எளிதில் முன்வருவதில்லை. உள்நாட்டுத் தொன்மக்களோ வெனில் இயல்பான தாராள மனப்பான்மையாலும், கொள்வனே கொடுப்பனைகளினால் நேருங் கட்டாயத்தினாலும் அரையுங்குறையுமாக வந்தேறிகளின் மொழியைப் பேசப் பழகிக் கொள்வார்கள். காலமேறவேற இந்த அரைகுறைப் பயிற்சியே திருத்தமுற்று ஏறக்குறைய முதன் மொழியோடு ஒப்பிட்டுக் கூறத்தக்க நிலையை அடைகின்றது. இந்நிலையில் பண்டைய உள்நாட்டுமொழி சிறிதுசிறிதாகப் புறக்கணிக்கப் பட்டு மங்கி மடிந்து மாய்ந்தொழிகிறது. நன்கு திருத்த முற்றுக் கலையுரம் பெற்றுச் செம்மொழிகளாக வழங்கும் தொன்மொழிகள் நிலவும் தென்னிந்தியப் பகுதி யொன்றில் மட்டுமே ஆரியம் வெற்றிபெற முடியாது தனித்து நின்று தயங்குவதாயிற்று. இது பண்டைய வரலாற் றுண்மையாகும். எனினும், பண்டைய இந்திய மொழியொன்று ஆரிய மொழி வழங்கு மிடத்திற் பரவிக்கலப்புற்று அதனை வழக்கிழக்கச் செய்தது என்பது யாண்டு மில்லை.

இனி, ஆரியமென்பது இந்திய ஐரோப்பிய மொழி யினத்தைச் சேர்ந்த மொழிகளில் ஒன்றாகும். அஃது இந்திய-ஆரியமென்றும், ஈரானியமென்றும் இரு பிரிவினது.

ஈரானிய மொழிகள் பேசும் பகுதியினர் பாரஸீகம், பலூச்சிஸ்தானம், ஆப்கானிஸ்தானம் என்னும் நாடுகளில் தங்கி உறைவராயினர். அவ்வாறு பரந்துறைய நேர்ந்தமை காரணமாக அவர்கள் பேசிய மொழிகள் பெர்ஸிக் என்றும், மீடிக் என்றும் இரு பிரிவாகத் தொகுக்கப் பெற்றன. பெர்ஸிக் என்பது இக்காலப் பாரசீக மொழியின் பண்டைப் பெய