பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

இத்தமிழ்மொழியை யுள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் பலவற்றையுங் குறிப்பதற்குக் குறியீடொன்று இன்றியமையாது வேண்டப்படுமாதலின் “திராவிடம்” என்று அதனை வகுத்துக்கோடல் எடுத்துக்கொண்ட ஒப்பிலக்கண முறைக்குப் பொருத்தமாம்.

“திராவிடம்” என்று கொண்டதேன் என்பது பின்வருமவற்றால் இனிது விளங்கும். வடமொழியில் தென்னிந்திய மொழியினத்தைக் குறிப்பதற்குப் பண்டை நாளில் வழங்கப்பட்டதாகத் தெரியக்கிடப்பது “ஆந்திர-திராவிட பாஷா” என்ற சொற்றொடரேயாம். “தெலுங்கு-தமிழ் மொழி” என்பது அச்சொற்றொடராற் போந்த பொருள். கி. பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படும் சிறந்த வடமொழிவாணரான குமாரில பட்டர் என்பார் இச்சொற்றொடரை முதன்முதலாக எடுத்தாண்டுள்ளார். தென்னிந்தியாவில் வழங்கும் மொழிகள் இரண்டிற்கு மேற்பட்டிருக்க, தெலுங்கு தமிழ் என்ற இரண்டைமட்டுங் குறித்தெடுத்துக்கொண்டது “மேம்போக்கான” தொன்றாகத் தோற்றலாம். ஆனால், தென்னிந்திய மக்கட்டொகுதியினரிற் பெரும்பாலோராற் பேசப்படுவது தமிழுந் தெலுங்குமே யாதலின், பெருவழக்கு நோக்கி அவ்விரண்டை மட்டுமே தேர்ந்துகொண்டது ஒருவகையில் ஏற்புடைத்தேயாகும். மலையாள மொழியைத் தமிழிலும், கன்னடத்தைத் தெலுங்கிலும் அக்காலத்தினர் அடக்கிக் கொண்டனர்போலும்!"

இனி, மனுஸ்மிருதியில் பத்தாவது பிரிவில், “கீழ்வரும் க்ஷத்திரியக் குடிகள் படிப்படியாக (ஆரிய) சமஸ்காரங்களிலிருந்து வழுவி, பார்ப்பனர்களுடன் சகவாசமிழந்து விருஷலர்கள் (ஜாதிப் பிரஷ்டர்கள்) ஆனார்கள்:-பெளண்ட்ரகர், ஒட்ரர், திராவிடர், காம்போஜர், யவனர், சாகர், பாரதர், பஹ்லவர், சீனர், கிராதர், தாதர், கசர்’ என்று கூறப்பட்