பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



“திராவிட மொழிகள்”

9

என்பவராற் பேசப்படும் மொழியாகிய "பைசாச்சி” என்றே அழைக்கப்படுவவாயின. இது கிடக்க.

இனி, அண்மையிலிருந்த வடநாட்டு அறிஞர் பலரும் தென்னிந்திய மொழிகளைத் திராவிடமொழிகள் என்றே குறிப்பிட்டு வந்துள்ளனர். இந்திமொழி நூலறிஞரான பாபு இராஜேந்திரலால் மித்ரா என்பார், 1854-ஆம் ஆண்டில், “திராவிடி” என்பது மூலபாகதங்களில் ஒன்றே யென்றும், செளரசேனியுடன் அஃது ஒருங்கு சேர்த்தெண்ணற் குரியதென்றும், அது செளரசேனியைப்போன்றே பிற பல உண்ணாட்டு மொழிகளுக்குத் தாய்மொழியென்றும், நன் கெடுத்து கவின்றுள்ளார்.

இதுகாறுங் கூறியவாற்றால், "தமிழ்" என்பதைத் தமிழ்மொழி யொன்றிற்கே சிறப்பாக அமைந்த பெயராகக் கொண்டு, தென்னாட்டில் வழங்கும் தமிழுந் தெலுங்கும் உள்ளிட்ட பல மொழிகளையுங் குறிக்கும் ஒர் இனமொழியாக "திராவிடம்” என்பது பரந்துபட்டபொருளில் கொள்ளக் கிடப்பது காலங்கண்ட தொன்றாகும் என்பது ஒருவாறு விளக்கப்பட்டது.