பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

காணலாம். இஃதொன்றைக் கருகின் தமிழர்களைக் கீழைத்தேய கிரேக்கர்கள் அல்லது ஸ்காட்ச்கள் என்று கூறலாம் போலும்! இந்துக்கள் என்று அழைக்கப்படும் பெருங்திரளான மக்களிடையே குருட்டு நம்பிக்கைகள் மலிந்து காணப்படும் என்று கூறுவதுண்டு. ஆயினும் அக்குருட்டு நம்பிக்கைகள் மிகவும் குறைந்த அளவிற்கானப்படும் ஒரு பகுதியினர் அவர்களுள்ளும் இருக்கின்றனர் என்றால் அவர்கள் தமிழர்களேயாம். பொருளீட்டும் பெருமுயற்சியும் பேருழைப்பும் வாய்ந்தவர்கள் தமிழர்களே. தெலுங்குமொழி பேசும் மக்கள் தமிழ்நாட்டிற் பத்தில் ஒரு பங்கு காணப்படலாம். அவர்களையும் முகம்மதியர்களையும் நீக்கிக் கணக்கிடின் தமிழ் மொழி பேசுந் தமிழ்மக்களின் தொகை ஏறக்குறைய 220 இலட்சங்களாகும்.

சென்னை

தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையே; அதுவே தென்னிந்திய மண்டிலத்திற்கும் தலைநகரமாகும். தமிழ்மக்கள் அந்நகரைச் சென்னபட்டினம் என்றே வழங்குவர். சந்திர கிரித் தெலுங்கரசர்க்குக் கப்பங்கட்டி வந்தவரும், செங்கற்பட்டு நாயக்கரின் மாமனுருமான சென்னப்ப நாயக்கர் என்பவரிடமிருந்து ஆங்கிலேய வணிகக்குழாத்தினர் ஒரு சிறு கோட்டையைப் பெற்று, அதனே அவர்கள் அரண் அமைந்த தொழிற்சாலையாக மாற்றியமைத்துக்கொண்டனர். மதராஸ் (மதராஸ்பட்டினம்) என்று ஆங்கிலேயர்களால் அஃது அழைக்கப்பட்டு வந்தமைக்குச் சரியான காரணந் தெரியவில்லை. ஒருகால், தமிழ்ச் சொல்லான “மதில்” என்பதற்கு நேரான தெலுங்கு மதுரு (கோட்டையின் மதிற்சுவர்) என்ற சொல்லின் அடியாக அப்பெயர் பிறந்ததுபோலும் மதராஸ் நகருக்கு அண்மையில் சதராஸ் என்று ஓர் ஊரும் உள்ளது.