பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

இனி, வராஹமிஹிரரின் பிருஹத் சம்ஹிதையில் திராவிடம் என்ற சொல் திராவிடம் என்பதற்கு மாறாகப் பல இடங்களில் வழங்கப்பட்டுள்ளது என 1டாக்டர் கெர்ன் என்ற அறிஞர் கூறுகிறார். இந்தத் திரமிடம் என்பதே திரமிளம் என்பதாக, 2இந்தியாவில் புத்தமத வளர்ச்சி’’ என்று கி. பி. 1573-ல் தாரநாதர் என்பவரால் திபேத்தில் எழுதப்பட்ட ஒரு நூலிற் காணப்படுகிறது. மலையாள மொழியிலுள்ள புராணங்களில் இவ்வுருவமே காணப்படுகின்றதென 3டாக்டர் குண்டெர்ட் என்பவர் குறித்துள்ளார். "மகாவமிசத்திலுள்ள பாலி யில் திரமிளம் என்பது தமிளோ என வழங்கப்பட்டுள்ளது. சிரமணம் என்ற வடசொல் சமணம் என்று திரிந்துள்ளது ஈண்டு நோக்கற்பாற்று. இத் தமிளோ என்பதே தமிழ் என்றாயிற்று என்று எளிதில் ஊகிக்கலாம்.

இனி, 5பியூட்டிஞ்சர் டேபில்ஸ் என்ற பெயரால் உரோம நிலப்படங்கள் சில வழங்குகின்றன. அவற்றுள் காணப்படும் இந்தியப் பகுதி, "ஆந்திர இந்தி என்றும் தமிரிசி என்றும் இரண்டு பெயர்களாற் குறிக்கப்பட்டுள்ளது. இவை தெலுங்கு நாட்டையும் தமிழ் நாட்டையுமே குறித்தனவாம். சில நூற்றாண்டுகட்குப் பின் வந்த குமாரிலபட்டர் என்பவரால் ஆந்திரர்கள் என்றும் திராவிடர்கள் என்றும் தெளிவாகக் குறிக்கப்படுவது கொண்டு இது விளங்கும். தமிரிசி என்ற பகுதியில் 7மொதுரா என்ற நகரம் ஒன்று இருந்ததாக 8இராவென்னா என்ற நில நூலாசிரிய ரொருவர் குறித்துள்ளமையால் தமிரிசி என்பது தமிழையே குறிப்பதாகும் என்பது வலியுறுத்தப்படும். இன்னும் 9ஹியூன்-சியாங் என்னும்


1. Dr. Kern. 2. Taranatha’s “Tibetan History of the Propogation of Buddhism in India.” 3. Dr. Gundert. 4. The Pali of the Mahawanso. 5. The Peutinger Tables. 6. Andre Indi and Damirice. 7. Modura, 8. Ravenna. 9. Tchi-mo-lo of Hieun-Tsang.