பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திராவிட மொழிகள்—தமிழ்

17

சீன யாத்திரிகர், ட்சி-மோ-லோ என்று குறித்துள்ளதும் தமிழ் என்ற சொல்லையேதான்.

இதுகாறுங் கூறியவாற்றால் திராவிடம் என்பதுதான் தமிழ் எனத் திரிந்தது என்பது ஒருவாறு விளங்கும். எனினும், இதில் ஒரு வியப்பென்னவென்றால், எடுத்ததெல்லாம் வடமொழியிலிருந்துதான் பிறந்தது என்று சாதிக்க முயலும் தமிழ்ப் புலவர்கள் இந்தத் ”தமிழ்” என்ற சொல்மட்டும் வடமொழியிலிருந்து பிறந்ததாகவோ, வடமொழிச் சொல்லே திரிந்ததாகவோ கொள்ள முன்வருகின்றர்களில்லை என்பதே. ”இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்” என்று தனிப்பட்ட ஒரு விளக்கத்தை அவர்கள் தமிழ் என்ற சொற்குக் கொடுத்து வலியுறுத்துகின்றனர். செம்மைசான்ற உயர்மொழியாகிய தமிழ்மொழியின் ஒலிச் சிறப்புநோக்கி இந்த வரையறையை ஒப்புக்கொள்ள எவரும் மறுக்கமாட்டார். ஆயினும் இதன்கண் அதன் பிறப்புண்மையும் பொதிந்து கிடக்கின்றது என்பதைமட்டும் எளிதில் ஒப்புக் கொள்வதற்கில்லை.

பாண்டியர்:- ”மகா வமிச” த்திற் றெகுத்து வைக்கப்பட்டுள்ள சிங்கள வரலாற்றுக் குறிப்புக்களில், ஈழ நாட்டின் முதன் மன்னன் விஜயன் என்பவனே என்றும், அவன் பாண்டிய நாட்டு மன்னன் ஒருவன்றன் மகளை மணம் புரிந்தானென்றும், அவன் மகனுக்கு அதனாலேயே பாண்டு வமிச தேவன் என்று பெயரிடப்பட்டதென்றுங் காணப்படுகின்றன. மகா பாரதத்திற் பாண்டவர்கள் ஐவருள் ஒருவனாகிய அருச்சுனன் பாண்டிய மன்னனொருவன் மகளை மணந்தானென்றுங் காணப்படுகிறது. [1]பிளைனி என்னும் உரோம வரலாற்றாசிரியர் காலத்தில் மலையாள நாட்டில் ஒரு பகுதி பாண்டியர்களின் ஆட்சிக்குள் இருந்ததாக உறுதியாகத் தெரிகிறது.


  1. Pliny