பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

சொல்லின் திரிபே அரவம் என்று கொண்டார் மற்றொரு சாரார்.

இவை யெல்லாம் அரவம் என்ற சொல் ஒரு மொழியையோ, அம் மொழி பேசும் மக்க ளினத்தாரையோ குறிக்க எழுந்த தமிழ்ச் சொல்லாகக் கொண்டு இடர்ப்பட்டுக் கூறியனவேயாம். அப் பொருளில் அரவம் என்ற சொல் தமிழ் மொழியில் யாண்டும் வழங்கப்பட்டதில்லை. தெலுங்கர்களும், கன்னடர்களும், தக்காணிகளும் அவ்வாறு அழைக்கின்றனர் என்று றேற்கூறினமையால், அச் சொற்பொருள் தமிழொ ழிந்த ஏனைய மொழிகளிலேயே தேடக் கிடப்பதாம். தெலுங்கு மொழி வல்ல பண்டிதர்கள் பலர் அரவம் என்பது திராவிட மன்று, வடசொல்லே என்று யாப்புறுத்துக் கூறுகின்றனர். அ+ரவ என்பதே அரவம் ஆகி, ஒலியற்றது என்று பொருள் கொடுக்கும் என அவர் கூறுவர். ஹ என்பது போன்ற மூச்சொலிகள் இன்மையால் தமிழ் இப்பெயர் பெற்றது என்பது அவர்கள் கருத்துப் போலும். இந்திய மொழிகள் பலவற்றுள்ளும் தமிழ்மொழி யொன்றில் மட்டுமே இவ் வொலிகள் இல்லை. அதனால் அம் மொழி இழுக்குடைய தொன்றாகக் கருதப்பட்டது. ஆனால் இத்தகைய ஒரு காரணத்தைக் கொண்டு பெறப்பட்ட ஒரு பெயரைத் தமிழ் மக்கள் தாமாகவே சூட்டிக்கொண் டிருப்பார்கள் என்று கருதுதல் அறிவுடைத்தாகாது.

ஒசையற்ற மொழி என்பதைக் குறிக்க அரவ-மு என்று மொழிக்குப் பெயர் சூட்டிய தெலுங்கர் அம் மொழி பேசுவோரை ’அரவா-ளு’ என்று அழைத்ததும் இயல்பே. தெலுங்கில் அரவம் என்ற சொல் ஓசையற்றது என்று பொருள் பட்டது; தமிழிலும் அரவம் என்ற சொல் வழங்குகிறது; ஆனால், அச்சொல், ஒலி என்று பொருள்படுகிறது. இப்பொருள்படும் இச்சொல்லை ரவ என்ற வடசொல் திசைச்