திராவிட மொழிகள்—மலையாளம்
25
சொல்லிலக்கண முறைப்படி அகர வொலியை முதலிலேற்று அரவ என்று தமிழிலும் வந்துள்ளது என்று கூறுதல் கூடாது. ஏன்? வடமொழி ரவ என்ற சொல் பேரொலியைக் குறிப்பது; தமிழிலுள்ள அரவம் என்ற சொல்லோ மெல்லிய ஓசையையே குறிக்கு மாகலின்.
இனி, [1]சோழ மண்டலக் கரையிலுள்ள நெல்லூர்ப் பகுதியில்[2] அர்வர்ணி என்ற மக்கள் வாழ்ந்துவருகின்றனர் என்று[3] டாலிமி என்ற கிரேக்க நில நூலாசிரியர் வரைந்துள்ளமையும் ஈண்டு குறிக்கற்பாலது.
எனவே, தமிழை “அரவம்” என்றை முப்ப தற்கு உண்மைக் காரணம் என்ன என்பது இன்னும் ஆராய்ச்சிக்கே இடனாக உள்ளது.
II. மலையாளம்
திராவிட மொழியினத்தில் தமிழுக்கு அடுத்தபடியாக இடம் பெறக்கூடியது மலையாளம் என்னும் மொழியாம். தமிழுக்கு மற்றெல்லா மொழிகளைக் காட்டிலும் நெருங்கிய தொடர்புடையது அம் மொழியே. மேற்குக் தொடர்ச்சி மலைகளுக்கு அப்பாலுள்ள மலபார் என்னும் மலைவாரக் கடற்கரையை யடுத்துள்ள ஊர்களில் இம்மொழி பேசப்பட்டு வருகிறது. மங்களுர் என்ற ஊர் தொடங்கித் தெற்கே திருவனந்தபுரம் வரை இம் மொழி வழங்கி வருகிறது. மங்களுருக்கு வடக்கே கன்னடமுந் துளுவமும் வழங்குகின்றன. திருவனந்தபுரத்திற்குத் தெற்கிலும் தென்கிழக்கிலும் தமிழ் மொழி பெரிதும் கலப்புறுகிறது. திருவாங்கூர், கொச்சி, மலையாளம், கன்னடக் கோட்டங்கள் ஆகிய இடங்கள் மலையாள மொழி வழங்கும் இடங்களாம். இம் மொழி பேசும் மக்கள் ஏறக்குறைய எழுபது நூாறாயிாவராவர். மலபார் கடற்கரை வெளிநாட்டு மக்கள் பலர்க்கு இறங்குதுறையா யிருந்துவந்-