பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

துள்ளது. ஃபினீஷியர், கிரேக்கர், யூதர், சிரியக் கிறித்தவர், பாரசீகக் கிறித்தவர், அராபியர்கள் ஆகியோர் வழிவழியாகப் பண்டு தொட்டு அந்தக் கரையோரங்களில் வாணிகம் நடாத்திவந்துள்ளனர். அவர்களுள் யூதரும் சிரியக் கிறித்தவரும் அராபியர்களும் பல இடங்களில் நிலையாகவே வந்து குடியேறி யுள்ளனர்.

மலையாளம் என்பது மலையாழ்மா என்றும், மலையாய்மா என்றும் கூறப்படும். இவை மூன்றும் ஒன்றேயாம். இவை மூன்றிலும் முதற்கண் நிற்கும் மலை என்ற பகுதி மலைத் தொடர் என்று பொருள்படும் வடசொல்லாகிய மலய என்பதன் திரிபன்று; தமிழ்ச் சொல்லாகிய மலை என்பதேயாம். தமிழ்ச் சொல்லாகிய மலை என்பதிலிருந்தே வடசொல்லாகிய மலய என்ற சொல் பெறப்பட்டுள்ளது என்று ஐயமின்றிக் கூறலாம். மலை என்ற பகுதி நீங்கிய “ஆளம்” என்ற சொல் 'பழகு, உடைத்தாயிரு, ஆணை செலுத்து' என்று பொருள்படும் ஆள் என்ற சொல்லடியாகப் பிறந்ததாகும். 'ஆழம்' என்று கொண்டு “ஆழ்” என்ற சொல்லடியாகப் பெறப்பட்டது என்று கொள்ளுதல் பொருந்தாது. தமிழ் “ஆண்மை” என்பது “ஆள்மை” என்பதன் திரிபாம். அந்த “ஆள்மை” என்பது மலையாளத்தில் “ஆள்மா” எனப்படும். அதுவே “ஆழ்மா” என்று திரிந்ததாகும். மலையாளத்தில் இந்த ஆள்மா என்பது ஆய்மா என்றுந் திரிபுறும். ஆகவே மலையாளம் அல்லது மலையாழ்மா என்பது மலைப்பகுதி என்றே பொருள்படும். வில்லாண்மை படைத்தோரை வில்லாளிகள் என்று அழைப்பார்கள். அதுபோன்றே மலைப்பகுதியில் வாழ்ந்து மலையாண்மை புரிந்து வந்தவர்கள் மலையாளிகள் என்றழைக்கப்பட்டனர்.

வடமொழிவாணர்கள் மலையாள மொழியைக் குறிப்பதற்குத் தனிப்பெயர் கொடுப்பதில்லை. மலையாளம் தமிழ்