பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திராவிட மொழிகள்—மலையாளம்

27

என்ற இரண்டையும் குறிப்பதற்கு அவர்கள் திராவிடம் என்ற சொல்லையே வழங்குவர். ஆனால் மலையாள நாட்டைக் குறிக்குங்கால் அவர்கள் வேறு தனிப் பெயர் கொடுத்தே குறிப்பர். கோகர்ணம் முதல் குமரிமுனை வரையிலுள்ள ஊர்களுக் கெல்லாம் அவர்கள் வடமொழிப் பெயர்கள் வகுத்துள்ளனர். மலையாள நாட்டுப் பகுதியை அவர்கள் கேரளம் என்று கூறுவர். கி. மு. மூன்றாம் நாற்றாண்டிற் குரியதான அசோகர் கல்வெட்டில் “கேரளம் புத்திரா” என்று மலையாள நாட்டு மன்னனொருவன் குறிக்கப்படுகிறான். திராவிட மொழிகள் எல்லாவற்றிலும் கேரளம் என்ற சொல் பல திரிபுகளுடன் பயின்று வருகின்றது. தமிழில் கேரலம், சேரலம், சேரம் என்ற மூன்று சொற்கள் வழங்குகின்றன. தெலுங்கிலும் கன்னடத்திலும் கேரளம் என்ற சொல் வழங்குகின்றது. மலையாள மொழியில் கேரளம், சேரலம், சேரம் என்ற சொற்களுடன் சேரம் என்ற சொல்லும் வழங்குகின்றது. கேரளவாசி யொருவன் கேலன் என்றும், கேளு என்றும் அழைக்கப்படுவான். இந் நாட்டு மன்னனைப் பிளைனி என்பவர் 1செலபொத்ராஸ் என்று குறிக்கின்றார். இது சேரல புத்திரர் என்பது போலும். டாலிமியோ 2கெரபொத்ராஸ் (கேர புத்திரர்கள்) என்று குறித்தார்.

பண்டைக்காலத்திற் கேரள நாடு இருபெரும்பிரிவினதாக இருந்தது போலும் ! மேலேக் கடற்கரை யோரத்தை யடுத்திருந்த பகுதிகளெல்லாம் கேரளம் என்ற வடமொழிப் பெயராலேயே வழங்கி வந்திருத்தல் வேண்டும்; இடையிடையே தமிழ்ப் பெயராகிய சேரம் என்பதையும் அது வழங்கியிருத்தல் கூடும். இஃது ஒரு பிரிவு. மற்றொரு பிரிவு உள்நாட்டுப் பிரிவு. இப்போதைய கோயமுத்தூர், சேலம் ஆகிய இருகோட்டங்களும், மைசூர் நாட்டின் ஒரு பகுதியும் இப் பிரி

■ 1. Celobotras. 2. Kerobothras.