பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திராவிட மொழிகள்—மலையாளம்

33

லிருந்து தென்பாற் போந்தவர்களானால், அவர்கள் முதலில் மேலைக் கடற்கரை (மலையாளம்) போந்து தங்கிய பின்னரே கிழக்கே (தமிழ் நாட்டில்) புகுந்திருத்தல் வேண்டும் என்றும் அவர் தம் கருத்தை விளக்கியுள்ளார். ”மேற்கு” என்று மலையாளிகள் பெரும்பாலும் மொழிவதில்லை என்றும், “படிந்நாயிறு” என்றும் அவர் எடுத்துக் காட்டியுள்ளார். ஆனால் ”படிந்நாயிறு” என்ற அச்சொல்லும் ”படு ஞாயிறு” என்ற தமிழ்ச் சொல்லின் மலையாளக் திரிபேயாம். படு ஞாயிறு என்பது மேற்கே தாழ்ந்து படும் அல்லது மறையும் சூரியனைக் குறிப்பதாகும். ”மேற்கு,” “கிழக்கு” என்ற சொற்கள் தமிழ்ச் சொற்களே என்பதையும், அவை தமிழ்நாட்டிலேதான் முதற்கண் தோற்றம் பெற்றன என்பதையும் டாக்டர் குண்டெர்ட் ஒப்புக் கொள்ளுகிறார். ஆனால் அவர் கருகிய வண்ணம் தமிழ் மக்கள் மேற்கிலிருந்துதான் கிழக்கே போந்தார்கள் என்று கொள்வது-அஃதாவது, மலையாளந்தான் தமிழ்மொழியின் தாய்மொழி என்று சொல்வது-இயற்கை யமைப்புக்கும் மொழிவரலாற்றிற்கும் எவ்வாற்றானும் முரண்படுவதாகும். ஈண்டுத் தமிழ்நாட்டின் கீழ்க் கரைக்கும், மேற்கரைக்கும் முறையே கோரமண்டல் என்றும், மலபார் என்றும். ஆங்கிலத்திற் பெயர் வந்ததேன் என்பதை ஆராய்வோம்.

1. கோரமண்டல்: தமிழ்ச் சோழமண்டிலம் என்பதே கோரமண்டலம் என்று திரிபுற்றிருத்தல் வேண்டும். சோழம் என்பதைச் சோளம் எனப் பிறழ உணர்ந்து, அதற்குத் தினை என்று பொருள்கொண்டு, சோழ மண்டிலம் என்றால் “தினை நாடு” என்று ஒருவர்[1] பொருள் கூறியது தவறேயாகும். பாண்டிய மண்டிலம் என்பது பாண்டிய நாடு என்று பொருள்படுவதே போன்று சோழ மண்டிலம்


  1. ஃப்ரா பாலினோ லெயின்ட் பார்தோலோமியோ