34
கால்டுவெல் ஒப்பிலக்கணம்
என்பது சோழநாடு என்றே பொருள்படும். முதன்முதல், இந்தியாவிற்கு வந்த போர்த்துகேசியர்கள் மேற்கரையி லிருக்கும் கொல்லத்திலிருந்து கீழ்க்கரையில் ஒரிஸ்ஸா வரையிலுள்ள கடற்கரைக்குச் சோழ மண்டிலம் என்றே பெயர் கூறிவந்தனர் என டாக்டர் குண்டெர்ட் கூறுகிரார். போர்த்துகேசியர்கள் வருவதற்கு முன்னிருந்த முகம்மதியர்கள் சோழமண்டிலக் கரையின் பெரும் பகுகியை மா’பார் என்றே அழைத்துவந்தனர் என்பதும், அதனையே நெடு நாள்வரை ஐரோப்பியர்களும் வழங்கிவந்தனர் என்பதும் மார்க்கோ போலோவின் குறிப்புக்களால் தெரியவருகி்ன்றன.
மாபார் என்பது நீண்ட கரை என்றே பொருள்படும்; முன்காலக்கில் மதுரையை யடுத்த கடற்கரைக்கு அதுவே பெயராக வழங்கிவந்தது. மதுரைக் கரையிலிருந்து ஈழத்திற்குச் செல்வதற்கு 'இராமர் பாலம் ' (சேது) என்ற நீண்ட அணை யொன்று இருந்ததே இவ் வழக்கிற்குக் காரணம் போலும்! பின்னர், கீழ்க்கரை முழுதிற்குமே இப்பெயர் வழங்கப்பட்ட தாகல் வேண்டும். பிற்காலத்தில் வந்த - டச்சுக்காரர்கள் கீழ்க்கரையின் நடுப் பகுதியை மட்டும் :சோரோ மாண்டல் ’ என்று குறித்து வந்தனர்.
'இந்தியாவிற்குப் போர்த்துகேசியர்கள் வந்தபோதே கோரமாண்டல் என்ற பெயர் வழங்கிவந்தது உண்மையே. 1499-ஆம் ஆண்டில் வெளிவந்த ஹீரானிமோ டீ'ஸ்டோ ஸ்டெஃபானோ[1] என்ற சிறு வரலாற்று நூலில் இப் பெயர் எடுத்தாளப்பட்டுள்ளது. ஈழத்தை விட்டபின் பன்னிரண்டு நாட்கள் கழித்துக் கோரமாண்டல் என்ற மற்றோரிடத்தை அடைந்தோம் என்று அதிற் கூறப்பட்டுள்ளது. 1510-ல்
வெளிவந்த வெய்தெமாவின் கடற்செலவு" என்ற நாலிலும்,
- ↑ 1. Hieronimo de, Sto Stefano. 2, Vaithema's Travels.