பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திராவிட மொழிகள்—மலையாளம்

35

யார்போசா[1] என்ற போர்த்துகேசிய வரலாற்று நூலிலும் சாரமாண்டல் என்றும், கோரோமாண்டல் என்றும், சொலொமண்டில் என்றும், சோல்மெண்டர் என்றும் பல வாறாக வழங்கப்பட்டுள்ளது. முகம்மதியர்களும் சோழமண்டிலம் என்ற பெயரையே வழங்கிவந்தார்க ளென்பதற்கு ரோலண்ட்ஸன் மொழிபெயர்ப்பாகிய ’தோஃபாத் அல் மஜாஹிதீன் அல்லது மலபார் முகம்மதியர்களின் வரலாறு'[2] என்ற நூலும் சான்று பகர்கின்றது. சோல மொண்டல[3]த்தி லுள்ள மைலாப்பூரிலும், நாகபட்டினக்த்திலும் ஏனைய கடற் றுறைகளிலும் பறங்கிகள்[4] கோட்டைகள் வகுத்துக்கொண்டனர் என்று அந் நூலிற் காணப்படுகிறது.’’ என்று கர்னல் யூல்[5] வரைந்துள்ளார்.

இவற்றாலும், சகரமும் ககரமும் ஐரோப்பிய மொழிகளில் மாறுவதுண்டாதலாலும், சிறப்பு ழ கரத்திற்கு ரகரம் வழங்குவது பிறநாட்டு வழக்காதலாலும் சோழ மண்டிலம் என்ற தமிழ்ச் சொற்றொடரே ஆங்கிலத்தில் கோரமாண்டல் என்று திரிந்தது என்பது இனிது விளங்கும்.

2. மலபார்: மலபார் என்பதன் முதற்பகுதியும் மலையாளம் என்பதன் முதற்பகுதியும் ஒன்றேயாகும். (தமிழ்: மலை, மலையாளம்: மல) பிற்காலக் கிரேக்கர் இதனை மலெ என வழங்கினர். அராபியக் கப்பலோட்டிகள் நெடுநரள் வரை பார் என்னும் அடை இல்லாமல் மல என்னும் முதற் பகுதியை மட்டுமே அந்நாட்டின் பெயராக வழங்கிவந்தனர். 851-ல் குலம்-மலை என்ற வழக்கும், 1150-ல் மலீ, மலிய என்ற வழக்குகளும் காணப்படுகின்றன. இவற்றுள் குலம் மலை என்பதில் குலம் என்பது கொல்லத்தைக் குறிப்பதாகும். (கொல்லம் என்ற நகரின் பெயர் 660-ம் ஆண்டிலேயே


  1. Barbosa
  2. Tohfat al Majahidin or History of Mahammadans In Malabar
  3. Solmondul
  4. Franks
  5. Col. Yule.