பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

வழங்கியதாகத் தெரிவதால் அது 825-ல் அமைக்கப்பட்ட தென்னும் கூற்றுத் தவறென்று ஏற்படுவது ஈண்டுக் குறிப்பிடத் தக்கது.)

பார் என்னும் அடை முதன்முதலாக 1150-லேயே வருகின்றது. இது வாரம் என்னும் வடசொல்லி லிருந்து வந்ததென்றும், பார் என்னும் அராபியச் சொல்லி லிருந்து வந்ததென்றும், பார் என்னும் பாரசீகச் சொல்லி லிருந்து வந்ததென்றும் பலவாறான கொள்கைகள் உள்ளன. அடிப் பகுதி என்று பொருள்படும் வாரம் என்ற தமிழ்மலையாளச் சொல்லே இஃது எனக் கொள்ளலாமாயினும், அத்தகைய வழக்கு அம்மொழிகளில் இல்லாதிருப்பது அங்ஙனம் கொள்ள இடையூறாகின்றது. வட இந்திய நாட்டுப் பெயர்களாகிய மார்வார், தார்வார், கத்தியவார் என்பவற்றுள்ளும் இதே அடை காணப்படுவது வடமொழி ”வாரம்” என்பதை உறுதிப்படுத்துவதாகத் தோன்றக்கூடும். ஆனாலும், வார் என்பது வாஃட் என்று எழுதப்படுவதி லிருந்து இவை சூழல், நாடு என்னும் பொருள் உடைய வாட என்ற வட சொல்லிலிருந்து வந்தவையே என்றேற்படுகின்றது.

முதன்முதல் இந்த அடைமொழியை வழங்கியவர்கள் அராபியரேயாவர். ஆதலால் “பார்” என்ற அராபியச் சொல்லையே இதன் முதலாகக் கொள்ளல் வேண்டும். ஆனால் பார் என்ற பாரசீகச் சொல்லை நாடு, கண்டம் என்னும் பொருளில் அராபியர் பல்வேறிடங்களில் பயன்படுத்தி யிருப்பதாகக் கர்னல் யூல் கூறுகிறார். ஆகவே “பார்” என்னும் பாரசீகச் சொல்லடியாகவே, மலபார் என்பதிலுள்ள பார்[1] பிறந்திருத்தல் வேண்டும் எனக் கோடலே சிறந்தது.

மலபார்க் கரைக்கு அருகில் உள்ள தீவக் கூட்டங்களுக்கு மால் தீவங்கள் என்று பெயர். பிரார் தேலா வால்[2]


  1. (தமிழ்ப்) பார் . பரப்பு. வன்னிலம்.
  2. Pyrard dela Val