பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திராவிட மொழிகள்—திரிபுமொழிகள் அல்ல

57

உள்ளது. ஆனல், இக்காலை வழங்கும் கன்னட எழுத்துக்களோ தெலுங்கிலிருந்து பெறப்பட்டு, ஒருசிறிது மாறுபட்டியலுகின்றன. இக் காரணத்தால் கன்னடம், தெலுங்குடன் நெருங்கிய உறவுடையது என்று கொள்வதற்கு மில்லை. ஏன்? மொழி என்ற முறையில், கன்னட மொழி தெலுங்கைவிடத் தமிழையே பெரிதும் சார்ந்ததாகும். அதிலும், பழைய கன்னட எழுத்துக்கள் தெலுங்கெழுத்துக்களுக்கு முற்றிலும் வேறானவையாம்.

திருந்திய மொழிகளாகக் கொள்ளப்பட்ட, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு என்ற ஆறனுள், தமிழிற்கும் தெலுங்கிற்கும் இடையேயுள்ள வேறுபாடு மிகப் பெரிதாம். இரு மொழிகளிலும் உள்ள வேர்ச் சொற்களிற் பெரும்பாலன இரண்டற்கும் பொதுவாகக் காணப்படுகின்றமை உண்மையே. எனினும், தமிழை மட்டும் அறிந்த ஒருவர், தெலுங்கில் இலக்கண முறைப்படி அமைக்கப்பட்ட ஒரு முழு நீண்ட சொற்றொடரை அறிந்துகொள்ளுதல் என்பது எளிதில் முடியாது; அவ்வாறே தெலுங்கைமட்டும் அறிந்த ஒருவர் தமிழில் இலக்கண முறைப்படி அமைக்கப்பட்ட ஒரு முழு நீண்ட சொற்றொடரை அறிந்துகொள்ளுதல் என்பதும் எளிதில் முடியாது. எனவே, இம் மொழிகள் அனைத்தும் ஒரே மூல மொழியினின்றும் கிளைத்தனவே யாயினும், இன்றைய நிலையில், ஒன்றற்கொன்று உறவுடைய தனிப்பட்ட மொழிகளாகவே கருதப்படும்.

திருந்திய இம் மொழிகளினிடையே இத்துணை வேறு பாடானல், திருந்தா மொழிகளான துதம், கோதம், கோண்டு, கந்தம், ஒராவோன் என்ற மொழிகளுக்கிடையே மிகுந்து காணப்படும் வேற்றுமைகளை எடுத்துரைக்கவும் வேண்டுமோ? உண்மையைக் கூறின், அவற்றிற் கிடையே